திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சுயம்பு போல் வளர்ந்து சாதித்த இயக்குனர்.. ஆலமரம் போல் தலையில் தூக்கி வைத்து ஆடும் ரஜினி, கமல்

சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்து வருகிறார்கள். ஆனால் சில இயக்குனர்களின் பெயர் மட்டும்தான் சினிமாவில் பல வருடங்கள் கடந்தாலும் நிலைத்து நிற்கிறது. அப்படி ஒரு இயக்குநரை தான் தற்போது உச்ச நட்சத்திரங்கள் கொண்டாடி வருகின்றனர்.

தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தின் மூலம் நம் அனைவரையும் வியக்க வைத்த மணிரத்தினம் தான் அது. தனக்கென ஒரு பாணியில் அற்புதமான திரைப்படங்களை கொடுத்திருக்கும் இவர் எந்த முன் அனுபவமும் இல்லாமல் தான் சினிமா துறைக்கு காலடி எடுத்து வைத்தார்.

Also read : பொன்னியின் செல்வனுக்கு 11 வருடத்திற்கு முன்பே மணிரத்தினம் போட்ட பிள்ளையார் சுழி.. மொத்தத்தையும் கெடுத்து சின்னாபின்னமாக்கிய விக்ரம்

இப்போதெல்லாம் இயக்குனர்கள் பிரபல டைரக்டர்களிடம் வேலையை கற்றுக் கொண்டுதான் சொந்தமாக படம் இயக்க வருகின்றனர். ஆனால் மணிரத்னம் அப்படி கிடையாது. அவர் இதுவரை யாரிடமும் உதவி இயக்குனராக வேலை செய்தது இல்லை. அவ்வளவு ஏன் ஒரு குறும்படத்தை கூட அவர் இயக்கியது கிடையாது.

ஆரம்பத்தில் அவர் சில தோல்விகளை சந்தித்தாலும் அதற்கு அடுத்து இவருக்கு எல்லாமே வெற்றியாக தான் அமைந்தது. கமலுக்கு ஒரு நாயகன், ரஜினிக்கு ஒரு தளபதி என்று இவர் இயக்கிய திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களின் நினைவை விட்டு நீங்காது. அந்த வகையில் தமிழ் சினிமாவை வேற லெவலுக்கு கொண்டு சென்ற பெருமை இவருக்கு உண்டு.

Also read : நண்பருக்காக கால்ஷூட்டை தூக்கிக் கொடுத்த ரஜினி.. சத்தம் இல்லாமல் வேலையை தொடங்கிய தயாரிப்பாளர்

இப்படிப்பட்டவரை தான் இன்று ரஜினி மற்றும் கமல் இருவரும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். அதிலும் பொன்னியின் செல்வன் போன்ற மாபெரும் காவியத்தை துணிந்து இயக்கி அதில் வெற்றியும் கண்ட இவரை ஒட்டுமொத்த திரையுலகமும் பாராட்டி வருகிறது.

ஏற்கனவே இருமுறை நெஞ்சு வலியால் சிகிச்சையில் இருந்த இவர் தன் உடல்நிலை பற்றி கவலைப்படாமல் மிகவும் ரிஸ்க் எடுத்து தான் இந்த பொன்னியின் செல்வனை இயக்கி இருக்கிறார். அவ்வளவு கஷ்டப்பட்டு கொடுத்த அவருடைய உழைப்பிற்கு இன்று தக்க பலன் கிடைத்து வருகிறது.

Also read : 80-களில் கமலஹாசன் செய்த சாதனை.. இதுவரை யாராலும் முறியடிக்க முடியவில்லை

Trending News