
Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சிங்க பெண்ணே சீரியலை விரைவில் முடிக்கும் திட்டத்திலிருந்து விலகி இருக்கிறார் இயக்குனர்.
இந்த சீரியல் ரசிகர்களின் பெரிய கோரிக்கை மகேஷை வில்லனாக காட்டக் கூடாது என்பதுதான். மகேஷுக்கு ஒரு ஜோடியை கொண்டு வந்து அவரை செகண்ட் ஹீரோவாக காட்ட வேண்டும் என எல்லோருமே எதிர்பார்த்தார்கள்.
சிங்கப்பெண்ணே சீரியலின் முழு கதைக்களம்
தற்போது அதற்கான வேலைகள் தான் நடந்து கொண்டிருக்கிறது. ஆனந்தி அன்பு வைத்தான் காதலிக்கிறாள் என்பதை முழுமையாக மகேஷ் ஏற்றுக்கொள்வது போல் காட்டப்படுகிறது.
அந்த காதல் வலியில் இருக்கும் மகேஷுக்கு ஆறுதலாக தில்லைநாதனின் நண்பன் மகள் உள்ளே நுழைகிறார்.
பிசினஸ் விஷயமாக மகேஷை சந்திக்கும் இவர் பின்னர் மகேஷ் காதலிக்க ஆரம்பிக்கப் போகிறார். இதற்கிடையில் மித்ரா மற்றும் அரவிந்தன் வில்லத்தனம், அவர்களைப் பற்றி மகேஷ் தெரிந்து கொள்வது என்பதெல்லாம் நடக்க இருக்கிறது.
மகேஷுக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எல்லோருக்குமே இருக்கும். சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல் ரோஜாவில் நாயகியாக நடித்த பிரியங்கா நல்காரி தான் மகேஷுக்கு ஜோடியாக வரப்போகிறார். இது குறித்த அடுத்த எபிசோடுகள் பெரிய அளவில் எதிர்பார்ப்பை பெறும்.