சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சீரியல் ஹீரோயினுக்கு தான் இப்போல்லாம் மவுசு அதிகம்.. 1 நாளைக்கு 1 லட்சம் சம்பளம் வாங்கும் சன் டிவி சீரியல் நடிகை!

Serial: என்னதான் டாப் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது தியேட்டர் முன்னாடி குத்தாட்டம் போட்டு அவர்களை கொண்டாடினாலும், நிஜமாவே மக்களின் மனதோடு ஒன்றிப்போனது சீரியல்கள் தான். சாயங்காலம் ஆறு மணிக்கு ஆரம்பிக்கும் சீரியல் ஒன்றன்பின் என்று இரவு 11 மணி வரை நம் வாழ்க்கையோடு ஒண்டி போய்விடுகிறது.

என்னதான் வீட்டில் இருக்கும் பெண்களை சீரியல் பார்க்காதே என திட்டினாலும் ஒரு பக்கம் அந்த சீரியலில் என்ன நடக்கிறது என காதோடு கேட்டுக் கொள்ளும் பழக்கமும் இருக்கிறது. சில எபிசோடுகளில் சுவாரஸ்யம் கூடும்போது மொத்த குடும்பமும் உட்கார்ந்து என்ன நடக்கிறது என பார்ப்பதும் உண்டு.

சீரியல்களின் பவரை தெரிந்து கொண்டுதான் ஒரு காலகட்டத்தில் 90களில் டாப் ஹீரோயின்களாக இருந்தவர்கள் ஒவ்வொருவராக சின்ன திரையில் களமிறங்கினார்கள். ஆனால் இதற்குப் பிள்ளையார் சுழி போட்டது நடிகை ராதிகா தான் என்று சொன்னால் மிகை ஆகாது.

1 லட்சம் சம்பளம் வாங்கும் சன் டிவி சீரியல் நடிகை!

அப்போது இருந்த சீரியல் நடிகைகள் வேறு, இப்போது இருக்கும் சீரியல் நடிகைகள் பெயர். கனக்கச்சிதமான மேக்கப், விளம்பரங்களுக்கு கொடுக்கப்படும், கலர் கலர் புடவைகள் அதற்கு மேட்சிங் ஆக அணிகலன்கள் என காலையில் பெட்டில் இருந்து எழுந்திருக்கும் போதே அப்படித்தான் இருப்பார்கள்.

சில சீரியல் ஹீரோயின்களுக்கெல்லாம் ரசிகர்கள் கூட்டமே தனியாக இருக்கிறது. சமீபத்தில் சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் சம்பளத்தை பற்றி மூன்று முடிச்சு சீரியல் ஹீரோ நிவாஸ் பேசி இருக்கிறார். அதில் சீரியலை பொருத்தவரைக்கும் ஹீரோவை விட ஹீரோயின்களுக்குத் தான் சம்பளம் அதிகம்.

ஒரு நாள் கால் சீட்டுக்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்குபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இரண்டு மூன்று படங்களில் நடித்தவர்கள், ஏற்கனவே ஹிட் சீரியல் கொடுத்தவர்கள் இவர்களுக்கெல்லாம் அப்படித்தான் சம்பளம் கொடுக்கப்படுகிறது என பேசி இருக்கிறார்.

மூன்று முடிச்சு சீரியல் ஹீரோயினி சுவாதி தான் இவர் சொல்கிறார் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சுவாதி ஏற்கனவே விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே பார்ட் 2 வில் நடித்தவர். சமீபத்தில் வெளியான மெய்யழகன் படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தார்.

Trending News