திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

6 வருடம் கழித்து ரெடியாகும் ஹிட் படத்தின் 2ம் பாகம்.. ஆதி ஹீரோவா இருந்தாலும் வெளுத்து வாங்கிய முனீஸ்காந்த்

Aadhi – Muneeskanth: சமீப காலமாக பல ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்களை பற்றிய அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் லோ பட்ஜெட் படமாக உருவாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திகில் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை அந்த திரைப்படத்தின் இயக்குனர் பகிர்ந்திருக்கிறார். தற்போது இது சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

பேய் படங்களை முழுக்க முழுக்க திகில் காட்சிகளுடன் ஒவ்வொரு சீனுக்கும் படம் பார்ப்பவர்கள் பயப்படும் வகையில் எடுப்பது என்பது ஒரு வகை என்றால், பேயை வைத்து காமெடி பண்ணுவது, திகிலான திரை கதையாக இருந்தாலும் அடுத்தடுத்த காட்சிகள் முழுக்க படம் பார்ப்பவர்களை சிரிக்க வைப்பது இன்னொரு டெக்னிக். அப்படி வெளியான திரைப்படம் தான் இது.

Also Read:எப்பதான் சாமி முடிப்பீங்க, பாகங்களாக வரும் 6 படங்கள்.. அடுத்தடுத்து அருள்நிதி கையில எடுக்கும் சூப்பர் ஹிட் படம்

இயக்குனர் ஏ ஆர் கே சரவணன், சமீபத்தில் ஹிப்பாப் ஆதி நடித்த வெளியான வீரன் திரைப்படத்தை இயக்கியவர். இவருக்கு அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இவருடைய முந்தைய படம் தான் மரகத நாணயம். இந்த படம் கடந்த 2017 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு, பலதரப்பட்ட ரசிகர்களிடமும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது.

இவர் இன்று தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் 2 லோடிங் என பதிவிட்டு மரகத நாணயம் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இதன் மூலம் தன்னுடைய ஹிட் படமான மரகத நாணயத்தின் இரண்டாம் பாகத்தை இவர் இயக்க இருப்பதை மறைமுகமாக சொல்லி இருக்கிறார். முதல் பாகமே மிகப்பெரிய வெற்றியை அடைந்ததால் இரண்டாம் பாகத்தில் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிட்டது.

Also Read:மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டக்கூடிய சோகமான காதல் 6 படங்கள்.. த்ரிஷா பின்னாடி அலைந்தும் சேராமல் போன சிம்பு

நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஜோடியாக நடித்த இந்த படத்தில் நடிகர் முனீஸ் காந்த் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். படம் முழுக்க இவர் வரும் காட்சிகள் ரசிக்கும் படி அமைந்திருக்கும். கதாநாயகனான ஆதியை மறக்கும் அளவிற்கு மரகத நாணயம் படத்தை நினைத்தாலே இவருடைய முகம் தான் ஞாபகத்திற்கு வரும். அந்த அளவிற்கு நடித்து இருப்பார்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த இரும்பொறை என்னும் அரசனின் மரகத நாணயம் சாதாரண மக்களிடம் கிடைத்த பிறகு அதை தன்னுடைய பண தேவைக்காக எடுக்க நினைக்கும் கதாநாயகனை சுற்றி அமைந்த கதை இது. முதல் பாகத்தில் கையில் கிடைத்த மரகத நாணயத்தை உயிருக்கு பயந்து நடிகர் ஆனந்த் ராஜ் தூக்கி வீசி விடுவார். ஆனால் நடிகர் பிரேமானந்தா அந்த நாணயத்தை மறுபடியும் ஆனந்தராஜ் கையில் கொடுக்கும் பொழுது இரும்பொறை அரசனின் ஆவியும் லாரியில் வருவது போல் படம் முடிக்கப்பட்டு இருக்கும்.

Also Read: 5 டாப் நடிகர் நடிகைகள் சீக்ரெட்டாக குத்திய டாட்டூஸ்.. கணவரின் பெயரை பச்சை குத்திய சமந்தா

Trending News