திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கையெடுத்துக் கும்பிட்டு கெஞ்சி கேட்ட ரஜினி.. சுத்தமாகவே கண்டு  கொள்ளாத பக்தர் செய்த மட்டமான வேலை

Super Star Rajini: நேற்று முன்தினம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வெளியாகி தாறுமாறான வசூலை குவித்து கொண்டிருக்கிறது.  தங்களுக்கெல்லாம் திரை  விருந்து அளித்த இந்த படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமாரை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.  

விட்டா கோயிலை கட்டிடுவாங்க போல அந்த அளவிற்கு அவரை புகழ்ந்து பேசி வருகின்றனர். இப்போது நெல்சனுக்கு ரஜினியின் பக்தர் நடிகருமான ஒருவர் ரஜினியின் பேச்சை சுத்தமாகவே கேட்காமல் மட்டமான காரியத்தை செய்திருக்கிறார்.

Also Read: பீஸ்ட் வெற்றியா, தோல்வியா.? நெல்சனிடம் விஜய் கூறிய விளக்கம்.. மறுபடியும் இந்த கூட்டணி தொடருமா.?

ரஜினி ஜெயிலர் பட ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில், குடிப்பழக்கம் மட்டும் தன்னிடம் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது இருக்கும் உயரத்தை விட யாரும் தொட்டுக் கூட பார்க்காத உச்சத்திற்கு சென்றிருப்பேன். ஆகையால் தயவு செய்து யாரும் குடிக்காதீர்கள்.

குடிப்பழக்கம் இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விடுங்கள் என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டார். ஆனால் அதை சுத்தமாகவே மதிக்காத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பக்தரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் இயக்குனர் நெல்சனுக்கு போன் செய்து தலைவா வாழ்த்துக்கள்.

Also Read: நெல்சனை சுற்றலில் விட்ட ரஜினிகாந்த்.. இதுவரை யாரும் பார்க்காத சூப்பர் ஸ்டாரின் மறுபக்கம்

என் தலைவருக்கு இப்படி ஒரு படத்தை கொடுத்துட்டீங்கன்னு பாராட்டி உள்ளார். அதோடு நின்று விடாமல் ஐடிசி கிராண்ட் சோலாவில் ரூம் போட்டு  நெல்சனுக்கு சரக்கில் குளிக்க வைத்துள்ளாராம். இவர் கூடவே இயக்குனர்கள் லிங்குசாமி மற்றும் பல இயக்குனர்கள் கலந்து கொண்டார்களாம்.

குடிக்க வேண்டாம் என்று ரஜினி சொல்லிய கொஞ்ச நாட்களிலேயே அதே பட குழு குடித்து கொண்டாடி வருகிறது. நடிகர் ராகவா லாரன்ஸின் இந்த மட்டமான செயல் சூப்பர் ஸ்டார் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. இந்த விஷயம் மட்டும் ரஜினிக்கு தெரிந்தால் நிச்சயம் அவர் வருத்தப்படுவார்.

Also Read: 16 ஆண்டு பகையை நெல்சனை வைத்து தீர்த்துக் கொண்ட சன் டிவி.. பக்காவாக காய் நகர்த்திய கலாநிதி

Trending News