திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நான் நடிகன் மட்டுமல்ல என்பதை நிரூபித்த ரஜினி.. அரைமணி நேரத்தில் அரங்கை அதிர வைத்த தலைவர்

Super Star Rajini: 72 வயதிலும் எனர்ஜி குறையாமல் இளம் ஹீரோக்களுக்கெல்லாம் டஃப் கொடுத்துக் கொண்டிருக்கும் நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தை நடித்து முடித்திருக்கிறார்.

வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இந்தப் படத்தின் ஆடியோ லான்ச் நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த ஆடியோ லான்ச் விழாவில் ரஜினி பேசியது வெறும் அரை மணி நேரம்தான். ஆனால் அந்த அரை மணி நேரம் ஐந்து நாட்கள் பேச்சை கேட்டதற்கு சமம் என்று சொல்கிறார்கள்.

Also Read: சன் டிவி வெளியிடும் ஜெயிலர் பட ஆடியோ லான்ச் எப்போது தெரியுமா? ஜெட் வேகத்தில் எகிற போகும் டிஆர்பி

அவர் பேசியதை பார்த்தால் முழுவதுமாக அவர் சினிமாவை கற்றுக் கொண்டார். அங்கு பேசிய எந்த விஷயத்தையும் மனப்பாடம் பண்ணிக் கொண்டு எல்லாம் வரவில்லை.  ஜனங்கள் அந்த அந்த ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை ஏதோ கண்காட்சியை பார்த்தது போல் பார்த்தனர்.

அவர் பேசிய அந்த அரை மணி நேரமும் ரசிகர்களை மட்டுமல்ல அங்கிருந்த பிரபலங்களையும் புல்லரிக்க வைத்தது. நான் நடிகன் மட்டும் இல்லை, அனைத்தையும் அறிந்த ஞானி என்பது போல் காட்டிவிட்டார் ரஜினி. மௌனம் என்ற ஒத்த வார்த்தை எத்துணை வலிமை மிகுந்தது என்பதை ஒரு குட்டிக்கதை மூலம் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிய வைத்தார்.

Also Read: காகம் பருந்தாக முடியாது.. ரஜினி சொன்ன குட்டி கதை, வெடித்த அடுத்த சர்ச்சை 

சமீப காலமாகவே சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆளுக்கு ஆள் அடித்துக் கொள்கின்றனர். அதற்கெல்லாம் நேரடியாக பதில் சொல்லாத ரஜினி காகம் மற்றும் கழுகை ஒப்பிட்டு ஒரு குட்டிக்கதை மூலம் விளக்கினார். ஒரு காகம் கழுகை தொடர்ந்து தொந்தரவு செய்கிறது. இருந்தாலும் கழுகு அதை எதுவும் செய்யாமல் மேலே பறந்து போய்விட்டது. ஆனால் காக்காவால் அவ்வளவு உயரத்திற்கு பறந்து வர முடியாது.

இதில் நான் யாரையுமே குறிப்பிட்டு சொல்லவில்லை. இங்கு குலைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை. இது இரண்டும் இல்லாத ஊரும் இல்லை. நம்முடைய வேலையை பார்த்துக்கொண்டு நேரா போய்கிட்டே இருக்கணும் என ரஜினி அரங்கமே அதிரும் அளவிற்கு அனல் பறக்க பேசினார்.

Also Read: அதகளம் பண்ண வரும் முத்துவேல் பாண்டியன்.. ஜெயிலர் படத்துக்கு வந்த முதல் விமர்சனம்

Trending News