Ilayaraja copyrights issue: பூனைக்கு மணிக்கட்டு போவது யாருன்னு ரொம்ப நாளா ஒரு பஞ்சாயத்து போயிட்டு இருந்துச்சு. அதுக்கு இப்போ முக்கிய புள்ளி ஒருவர் சரியான பதிலோடு சர்ச்சையை முடிக்க இருக்கிறார். கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாகவே இளையராஜா காப்புரிமை பிரச்சனையை அவ்வப்போது கிளப்பிக் கொண்டிருக்கிறார்.
அமெரிக்காவில் ஒரு கச்சேரிக்கு எஸ் பி பாலசுப்ரமணியம் எல்லாமே ரெடி பண்ணி, இளையராஜா கேஸ் போட்டதால் கச்சேரிக்கு சிக்கல் ஏற்பட்ட சம்பவம் கூட நடந்திருக்கிறது. நம்முடைய பிளே லிஸ்டில் ரிப்பீட் மோடில் இவருடைய பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
தன்னுடைய ஓய்வு காலங்களில் கொண்டாடப்பட வேண்டிய ஒரு கலைஞன் அதிக வெறுப்பை சம்பாதித்து கொண்டிருப்பது ஒரு பக்கம் வருத்தமளிக்கும் விஷயமாகத்தான் இருக்கிறது. இன்னொரு பக்கம், இவர் ஏன் இந்த மாதிரி எல்லாம் செஞ்சு கிட்டு இருக்காருன்னு கோபமும் வருது.
நான் இசை அமைத்த பாட்டுக்கள் எனக்கு சொந்தம்னு இளையராஜா சொல்றாரு. அப்படி பார்த்தால் அந்த மெட்டுக்கு உயிர் கொடுப்பது பாடல் வரிகள் தான். அதை மனதில் பதிய வைப்பது பின்னணி பாடகர்கள். இப்படி எல்லோருடைய கூட்டும் முயற்சியும் இருக்கும் போது அதை ஒருவர் மட்டுமே உரிமை கொண்டாடுவது சரியல்ல.
இது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும் ரஜினி நடித்திருக்கும் கூலி படத்திற்கு சால்ட் ஆக நோட்டீஸ் அனுப்பிவிட்டார் இளையராஜா. தற்போது இந்த வழக்கு குறித்து பிரபல தயாரிப்பாளர் கே பி ராஜன் பேசியிருக்கிறார். ஒரு கொத்தனார் தினக்கூலி வாங்கிக் கொண்டு ஒரு கட்டிடத்தை கட்டி முடிக்கிறார்.
இப்படி இருக்கும்போது நான் கட்டின கட்டிடம் எனக்கு தான் சொந்தம் என்று அவர் சொல்ல முடியுமா. அப்படித்தான் இருக்கிறது இளையராஜா சொல்லும் கதை. இளையராஜாவுக்கு சம்பளம் கொடுத்து படத்திற்கு இசையமைக்க வைப்பது தயாரிப்பாளர் தான்.
அவர் ஒரு மெட்டு போட்டுக் கொடுத்து, இதை எடுத்துக்கோங்க என்று சொல்லிட முடியாது. தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஓகே சொல்லும் வரை அவர் பல மெட்டுக்களை போட்டுத்தான் ஆக வேண்டும். அதற்காகத்தான் அவருக்கு சம்பளம் கொடுக்கிறோம்.
அப்படி இருக்கும் பட்சத்தில் பாடல்களுக்கு அவர் உரிமை கொண்டாட முடியாது. இசையமைப்பாளர், பின்னணி பாடகர், அதில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் என அத்தனை பேருக்கும் சம்பளம் கொடுப்பது தயாரிப்பாளர்கள் தான்.
எனவே பாடல் என்பது அந்த தயாரிப்பாளருக்கு தான் சொந்தம். இது குறித்து நாங்கள் வழக்கு தொடர இருக்கிறோம். கண்டிப்பாக இந்த வழக்கு தயாரிப்பாளர்கள் தரப்பிற்கு சாதகமாக தான் வரும் என்று பத்திரிகையாளர்கள் பேட்டியில் ராஜன் சொல்லி இருக்கிறார்