வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

Varalaxmi Sarathkumar : சரத்குமார் மகள் கொடுத்து வச்சவங்க தான்.. திருமணத்திற்கு முன்பே வரலட்சுமி வருங்கால கணவர் செய்த வேலை

 சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றது. நடிகையான வரலட்சுமி மிகவும் துணிச்சலானவர். அதேபோல்தான் அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரமும். 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான போடா போடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் பிஸியாக இருந்து வந்தார். ஆனால் அவரது படங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. 

இதனால் இப்போது ஹீரோயின் மட்டுமல்லாமல் எந்த கதாபாத்திரம் இருந்தாலும் தயங்காமல் நடித்து வருகிறார். இந்நிலையில் நிக்கோலாய் சஷ் தேவ் என்பவரை வரலட்சுமி விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். 

வரலட்சுமிக்கு வருங்கால கணவர் கொடுத்த சர்ப்ரைஸ்

நிக்கோலாய் பற்றி சில தவறான செய்திகள் இணையத்தில் உலவ தொடங்கியது. இதை அடுத்து வரலட்சுமி இப்போது பேட்டி ஒன்றில் அவரைப் பற்றி கூறியிருக்கிறார். கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு மேலாக நிக்கோலாயாவை எனக்கு தெரியும். 

ஆனால் அடிக்கடி சந்திக்க எங்களுக்கு வாய்ப்பு இல்லை. போனில் மெசேஜ் மூலம் தான் பேசிக் கொள்வோம். மேலும் எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தோம். 

என்னுடைய அப்பா அனுமதியோடு நார்வே நாட்டில் தனக்கு நிக்கோலாய் காதலை வெளிப்படுத்தினார். அதோடு எங்கள் இருவரின் பெயரில் மும்பையில் ஒரு வீட்டையும் வாங்கி இருக்கிறார்.

திருமணத்திற்கு முன்பே வரலட்சுமிக்காக சொந்த வீடே அவரது வருங்கால கணவர் வாங்கிக் கொடுத்திருக்கிறார். சரத்குமாரின் மகள் அதிர்ஷ்டசாலி தான் என பலரும் இப்போது கூறி வருகின்றனர்.

Trending News