திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மொத்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒத்த வார்த்தை.. லியோ ஆடியோ லான்ச்காக காத்திருக்கும் விஜய்

Vijay Audio Launch: கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷன் பற்றி தான். இதில் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் ரஜினி இடைவிடாமல் பேசி ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தார். மேலும் அவர் சொன்ன காக்கா, பருந்து கதையும் இணையத்தில் பேசு பொருளாக மாறியது.

மேலும் சூப்பர் ஸ்டார் சர்ச்சை தற்போது வரை முடியாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவை எல்லா சர்ச்சைக்கும் ஒத்த வார்த்தையில் முற்றுப்புள்ளி வைக்க லியோ ஆடியோ லான்ச் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார் விஜய். அதாவது வாரிசு ஆடியோ லான்சில் தொடங்கிய சர்ச்சை தான் சூப்பர் ஸ்டார் விவகாரம்.

Also read: விஜய்யைப் பார்த்து காப்பியடித்த ரஜினி.. வாண்டடாக கண்டன்ட் கொடுத்த சூப்பர் ஸ்டார்

சரத்குமார் முதல் முக்கிய பிரபலங்கள் பலரும் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என கொளுத்தி போட அது இணையத்தில் தீப்பிடிக்க ஆரம்பித்தது. இப்போதும் கொழுந்து விட்டு எரியும் இந்த தீயை அணைக்க விஜய்யால் மட்டுமே முடியும். கண்டிப்பாக விஜய்யும் தனது பட விழாவில் குட்டி ஸ்டோரி சொல்வதை வழக்கமாகத்தான் வைத்திருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் லியோ ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றி பேச இருக்கிறாராம். அதில் இந்த பட்டத்திற்கு உரிமையாளர் ரஜினி மட்டும்தான் என்று சொல்ல உள்ளார். அவரைப் பார்த்து வளர்ந்தவன் தான் நான் என்று விஜய் சொல்லும் வார்த்தையினால் மொத்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

Also read: 72 வயதில் சும்மா கிடைக்குமா சூப்பர் ஸ்டார் பட்டம்?. ஏழு வருடத்தில் 70 படங்கள் நடித்த சாதனை

இவ்வாறு நடந்தால் அது ரஜினியை காட்டிலும் விஜய்க்கு தான் மிகப்பெரிய பெயரை பெற்று தரும். தற்போதும் தன்னடக்கத்துடன் இருக்கிறார் என கண்டிப்பாக ரஜினி ரசிகர்கள் கூட விஜய்யை பாராட்டுவார்கள். அதுமட்டுமின்றி உண்மையிலேயே தூக்கி வைத்துக் கொண்டாடும் இடத்திற்கு விஜய் கண்டிப்பாக செல்வார்.

அதற்காகத்தான் இப்போது தளபதி விஜய் ஆயத்தமாகி வருகிறார் என்று அவரது நெருங்கிய வட்டாரத்தில் இருந்து கூறப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் இந்த விழாவில் அரசியல் பற்றியும் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும் இவை எல்லாவற்றிற்குமே லியோ ஆடியோ லான்ச்சை ஆயுதமாக பயன்படுத்த இருக்கிறார் விஜய்.

Also read: போட்டிக்கு நாங்களும் வரலாமா.? சூப்பர் ஸ்டார் பட்டத்தைப் போல் ஆரம்பித்த உலக நாயகன் பஞ்சாயத்து

Trending News