சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

வாலை சுருட்டி கொண்டு நடித்து கொடுத்த விஷால்.. பாலாவை போல இருக்கும் மற்றொரு இயக்குனர்

Vishal – Director Bala: நடிகர் விஷால் தமிழ் சினிமாவிற்குள் வந்த புதிதில், தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார். ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு அடுத்து, இவர் பக்காவான ஆக்சன் ஹீரோவாக வருவார் என ரசிகர்களும் எதிர்பார்த்தார்கள். அதற்கு ஏற்ற மாதிரி சண்டக்கோழி, திமிரு என அடுத்தடுத்து ஆக்சன் படங்களில் வெளுத்து வாங்கினார். ஒரு கட்டத்தில் விஷால் தன்னுடைய சினிமா பாதையை சரியாக அமைத்துக் கொள்ளாமல் விட்டு விட்டார்.

விஷாலை வைத்து படம் பண்ணவே தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் யோசிக்கும் அளவிற்கு இவருடைய நிலைமை வந்துவிட்டது. படப்பிடிப்பிற்கு சரியாக வராமல் இருப்பது, கதையில் தேவையில்லாமல் தலையிடுவது என எக்கச்சக்க பிரச்சனையை உருவாக்கினார் விஷால். கதைகள் தேர்ந்தெடுப்பதிலும் மொத்தமாக சொதப்பி தொடர்ந்து பிளாப் படங்களையும் கொடுத்து வந்தார். இதனால் தமிழ் சினிமாவில் அவரை கண்டுகொள்ள ஆளில்லாமல் போனது.

இதற்கிடையில் சொந்தமாக விஷால் பிலிம் ஃபேக்டரி என்னும் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். முதலில் ஒன்று, இரண்டு வெற்றி படங்களை கொடுத்த விஷாலுக்கு அடுத்தடுத்து தோல்வி படங்கள் அமைந்தது. இதனால் தனக்கு அதிக கடன் இருப்பதாக கூட விஷால் வெளியில் சொல்லி இருந்தார். இப்படி பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருந்த விஷாலின் சினிமா வாழ்க்கையை தூக்கி விட்டது மார்க் ஆண்டனி படம் தான்.

ஆனால் இந்த படத்திற்கு கூட சரியாக ஷூட்டிங் வராமல் டிமிக்கி கொடுத்திருக்கிறார் விஷால். ஆதிக் ரவிச்சந்திரன் நேராக விஷாலின் வீட்டிற்கு சென்று பஞ்சாயத்து எல்லாம் பண்ணி தான் பட வேலைகள் முடிக்கப்பட்டு இருக்கிறது. இப்படி ஓவராக ஆடி வந்த விஷாலுக்கு மொத்தமாக கடிவாளம் போட்டு இருக்கிறார் இயக்குனர் ஒருவர். படப்பிடிப்பு முடியும் வரைக்குமே பெட்டியில் அடைக்கப்பட்ட பாம்பு போல் வாலை சுருட்டி கொண்டு இருந்திருக்கிறார் விஷால்.

தமிழ் சினிமா இயக்குனர்களில் பாலா ரொம்ப ஸ்ட்ரிக்டானவர் என்று சொல்வது உண்டு. ஆனால் பாலாவை போலவே, ஸ்ட்ரீட் இயக்குனர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் இயக்குனர் ஹரி. சாமி, கோவில், சிங்கம் போன்ற ஹிட் படங்களை கொடுத்த ஹரி, ஹீரோக்களை தன் விருப்பப்படி தான் வைத்திருப்பாராம். அவர் சொல்லும் ஹோட்டலில் தான் ஹீரோக்கள் ஷூட்டிங் நேரத்தில் தங்க வேண்டுமாம், அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதை தான் மொத்த பட குழுவும் செய்யுமாம்.

விஷால் தற்போது இயக்குனர் ஹரியுடன் இணைந்து ஒரு படம் பண்ணியிருக்கிறார். எந்த சேட்டையும் செய்யாமல், சொன்ன நேரத்திற்கு படப்பிடிப்பது தளத்திற்கு வந்து விடுவாராம். அந்த அளவுக்கு கட்டுப்பாடுடன் வைத்திருந்தார் இயக்குனர் ஹரி. ஏற்கனவே விஷால் மற்றும் ஹரி இணைந்து தாமிரபரணி என்னும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார்கள். ஹரி கண்டிப்பாக தனக்கு இன்னொரு ஹிட் படத்தை கொடுப்பார் என்ற நம்பிக்கையில் விஷாலும் மொத்தமாக பம்மி விட்டார்.

Trending News