Biggboss 8 Tamil: பிக்பாஸ் சீசன் 8 தொடங்கிய 24 மணி நேரத்திற்குள்ளாகவே சாச்சனாவை வெளியேற்றி சர்ச்சையில் சிக்கி இருக்கிறது நிகழ்ச்சி தரப்பு. இதற்கு நியாயம் வேண்டும் என பார்வையாளர்கள் ஒரு பக்கம் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
அதேபோல் இரண்டாவது நாளான இன்று வெளியான ப்ரோமோவும் தீ பறக்கிறது. அதன்படி ஆரம்பத்தில் இருந்தே ஜாக்லின் ஏதோ ஒன்றை செய்ய முயற்சிக்கிறார். இதன் மூலம் நல்ல பெயர் வாங்கி மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்து கப்பை அடிக்க வேண்டும் என்பது அவருடைய திட்டமாக இருக்கலாம்.
ஆனால் அவருடைய முயற்சி பின்னடைவாக தான் மாறி இருக்கிறது. தற்போது பார்வையாளர்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் அவர் சம்பாதித்து வைத்திருக்கிறார். அவருடைய பேச்சும் நடவடிக்கையும் ரொம்பவே ஆடியன்ஸை கடுப்பேற்றி வருகிறது.
அதில் தற்போது வெளியான ப்ரோமோவில் அவர் பவித்ராவுடன் சரக்கு சரி சண்டை போட்டது விமர்சனம் ஆகி இருக்கிறது. அதன்படி ஆண்கள் அணிக்கு ஒரு பெண் செல்ல வேண்டும் என்பது நிபந்தனை. யாரை அனுப்பப் போகிறோம் என்ற விவாதம் பெண்களுக்குள் ஆரம்பித்துவிட்டது.
பவித்ராவுடன் மல்லுக்கட்டும் ஜாக்லின்
அங்குதான் சண்டை வெடித்துள்ளது. இரண்டு பெண்கள் இருந்தாலே அந்த இடம் ரத்தக்களரியாக மாறிவிடும். இதில் நவகிரகங்கள் போல் ஒன்பது பேரை பிக் பாஸ் உள்ளே அனுப்பி இருந்தார். அதில் ஒருவர் வெளியேறிய நிலையில் எட்டு பேர் இருக்கின்றனர்.
அவர்களுக்குள் தான் கொஞ்சம் கொஞ்சமாக ஈகோ சண்டை வெடித்து வருகிறது. அதில் பவித்ராவை அனுப்பினால் பாவம் பார்ப்பார்கள் அதனால் வேறு யாராவது செல்லட்டும் என முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் வருத்தப்பட்ட பவித்ரா நியாயமான கேள்வியை முன்வைக்கிறார்.
ஆனால் ஜாக்குலின் தேவையில்லாமல் பேசி அவரை கோபப்படுத்தி விட்டார். தன்னை டம்மி பீஸ் போல் நினைக்கிறார்கள் என்று ஆதங்கத்தில் பவித்ராவும் முடிந்த அளவு கத்திவிட்டு இடத்தை விட்டு வெளியேறுகிறார். இந்த ப்ரோமோவில் பவித்ராவுக்கு தான் ஆதரவு அதிகரித்துள்ளது.
ஜாக்லின் பேசி பேசியே எரிச்சல் ஊட்டுகிறார். ஆனால் பவித்ரா கெத்து காட்டிவிட்டார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இப்படி பெண்களுக்குள் சண்டை ஆரம்பித்துள்ள நிலையில் ஆண்கள் அணி எப்போதும் போல ஒற்றுமையும் கலகலப்புமாக இருப்பது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
பெண்களுக்குள் ஆரம்பித்த ஈகோ சண்டை
- திமிங்கலங்களுக்கு நடுவில் சிக்கிய மீன் குட்டி சாச்சனா
- சும்மாவே டிவி ரிமோட்டை தர மாட்டா
- விஜய் டிவியின் டிஆர்பி ஆட்டத்தில் பகடைக்காயாக சச்சனா