சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

விஜய் வேண்டாம், அஜித் வந்தா தான் ஹைப் இருக்கும்.. மறக்க முடியாத தரமான சம்பவம்

Ajith – Vijay: நடிகர் அஜித் குமார் எப்போதுமே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்ப மாட்டார். அதே போன்று தன்னுடைய சொந்த வாழ்க்கையில் நடப்பதையும் வெளியே தெரிய அனுமதிக்க மாட்டார். தன்னுடைய படங்களின் பிரமோஷன் விழாக்களில் கூட அஜித் கலந்து கொள்வது இல்லை. திரையைத் தாண்டி அஜித்தை நேரில் பார்ப்பது என்பது ரொம்பவே அரிதான விஷயம்.

இதனால்தான் அத்திப்பூத்தார் போல் அஜித் கலந்து கொள்ளும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் வைரலாகும். அஜித்தின் இந்த கொள்கையை பயன்படுத்தி தங்களுக்கு ஹைப் ஏற்ற நினைத்து பின் அதையே சோதனையாக மாற்றிய பெரும்புள்ளிகள் இருக்கிறார்கள். இதுவரை அந்த சம்பவம் தமிழ் சினிமாவின் தரமான சம்பவமாக பார்க்கப்படுகிறது.

கடந்த சில வருடங்களுக்கு முன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கலைஞர் 100 என்ற பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொள்ள எல்லா நடிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அஜித்தை அழைத்தபோது அவர் ஷூட்டிங்கில் இருந்ததால் முதலில் வர முடியாது என சொல்லி இருக்கிறார் . அதையும் மீறி அஜித்தை வரவழைக்க சிலர் நினைத்திருக்கிறார்கள்.

Also Read: பிரச்சனையை பார்த்து ஒதுங்கிப் போகும் விஜய்.. இப்படி இருந்தா அரசியலுக்கு வந்து என்ன பிரயோஜனம்?

முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமலஹாசன் அந்த நிகழ்ச்சிக்கு வருவதாக சம்மதம் தெரிவித்து விட்டார்கள். நடிகர் விஜய் அந்த சமயத்தில் கொஞ்சம் டவுன் ஆக இருந்தார். அவருக்கு ரெட் கார்டு கொடுக்கும் அளவுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் நெருக்கடி தெரிவித்து வந்த காலகட்டம் அது என்பதால் விஜய்க்கு அழைப்பு கொடுக்கவில்லை.

எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத அஜித் இந்த நிகழ்ச்சிக்கு வந்தால் பரபரப்பாக இருக்கும் என்று சிலர் நினைத்திருக்கிறார்கள். இதனால் சூட்டிங் இருந்ததால் அஜித்திற்கு அழைப்பு விடுத்து வற்புறுத்தி இருக்கிறார்கள். அஜித் மறுபடியும் மறுத்து விடவே அவரை மிரட்டி இந்த நிகழ்ச்சிக்கு வரவழைத்ததாக சொல்லப்படுகிறது.

விழா மேடையில் அஜித்தை பேச அழைத்த பொழுது அதில் தைரியமாக சினிமாவை சேர்ந்தவர்களே அரசியல் விஷயங்களுக்காக வரச் சொல்லி வற்புறுத்தாதீர்கள், நாங்கள் எங்கள் வேலையை செய்ய வேண்டும். இது போன்ற நிகழ்ச்சிக்கு வர சொல்லி மிரட்டுகிறார்கள் என்று ரொம்பவே ஓபன் ஆக பேசி இருக்கிறார். தற்போது அந்த நிகழ்ச்சி வீடியோவில் இருந்து இந்த கிளிப் நீக்கப்பட்டு விட்டதாக கூட சொல்லப்படுகிறது.

Also Read: நொண்டி என அசிங்கப்பட்ட நடிகர்.. பல போராட்டங்களுக்குப் பிறகு விஜய் அஜித்துக்கு இணையாக வந்த ஹீரோ

 

 

 

Trending News