புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

வாய்க்கொழுப்பல் வாய்ப்பை இழந்த டாப் நடிகை.. கடைசியில் காமெடி நடிகருடன் கிசுகிசுக்கப்பட்டதால், 2 முறை விவாகரத்து

ஹோம்லி லுக்கில் இருக்கும் நடிகை, 80களில் தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு டாப் நடிகையாக வலம் வந்தார். இருப்பினும் அவர் குறுகிய காலத்திலேயே சினிமாவை விட்டு காணாமல் போனார். இதற்கு காரணம் அவருடைய வாய் கொழுப்பு தான்.

ஏனென்றால் கருப்பாக இருக்கக்கூடிய நடிகருடன் இந்த குடும்பப் பாங்கான முகம் கொண்ட நடிகை நடிக்க முடியாது என ஓவர் திமிரு காட்டினார். அத்துடன் அந்த நடிகையின் தங்கையும் சினிமாவில் அறிமுகமாகி அவருடனே சேர்ந்து நடித்தார். அப்போது அந்த நடிகையை விட தங்கை நடிகை செம க்யூட்டாக தெரிந்தார்.

Also Read: எல்லாத்தையும் அனுபவிச்சிட்டு நடிகையை நேக்காக கழட்டிவிட்ட ஆக்சன் ஹீரோ.. கல்யாணத்துக்கே வேட்டுவைத்த நடிகை

ஆனால் இந்த குடும்பப் பாங்கான நடிகையின் முகத்தில் வயதான தோற்றம் வந்துவிட்டது. பின்பு இவர் நடித்த படம் ஒன்றை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள், ‘கிழவி! கிழவி’! என கத்தினார்கள். அந்த படத்திற்கு பிறகு அந்த நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. அத்துடன் இவர் பீக்கில் இருந்த போது கருப்பு நடிகரை புறக்கணித்ததால் பல நடிகர்கள் இவருடன் நடிக்க மாட்டேன் என ஒதுக்கினார்கள்.

கடைசியாக ஒரு காமெடி நடிகரை கெஞ்சி கூத்தாடி இரண்டு படங்களில் அவருடன் ஜோடியாக நடித்தார். அதன் பின் இவர்கள் இருவரையும் இணைத்து வைத்து செய்தித்தாள்களில் கிசுகிசுவும் வந்தது. இதை காரணமாக வைத்தே அந்த நடிகையை மணந்து கொண்ட கணவர் திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் குடியேறினார்.

Also Read: நம்பி வீட்டில் விட்டதற்கு கணவனை கைக்குள் போட்டுக் கொண்ட நடிகை.. புலம்பித் தவிக்கும் தோழி

பின்பு அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்றார். அதன் பின் 2வது ஆக ஒரு நடிகரை மணந்தார். அவருடனும் ஒரு சில வருடங்கள் மட்டுமே வாழ்ந்து விட்டு பின்பு தனது மகள்களுடன் இப்போது சென்னையில் வசித்து வருகிறார். இப்போது அந்த நடிகை சீரியலில் நடித்துக் கொண்டு காலத்தை தள்ளுகிறார்.

Trending News