திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

ஒரு வார்த்தையை பிரபலப்படுத்தி ஹிட்டடித்த 5 படங்கள்.. அதில் 2 படங்களை இயக்கி மாஸ் இயக்குனர்

தமிழ் சினிமாவில் ஒரு வார்த்தையை பிரபலப்படுத்தி ஹிட்டடித்த திரைப்படங்கள். இப்படங்கள் அனைத்தும் பல விருதுகளை பெற்று சாதனை படைத்தது. இதுபோன்ற வார்த்தைகளை மருத்துவ ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் சினிமா மூலம் மக்கள் மனதில் பதிய  வைத்துள்ளனர் இயக்குனர்கள். துப்பாக்கி மூலம் வெளிவந்த ஸ்லீப்பர் செல்ஸ் என்ற வார்த்தை அரசியல் ரீதியாக அதிமுகவில் உபயோகப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்லீப்பர் செல்ஸ் –  நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படம் தீவிரவாத கும்பலை பற்றிய கதை களம். இந்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஸ்லீப்பர் செல்ஸ் என்ற ஒரு பெயரும் உண்டு. இந்தப் பின்னணியை கொண்ட இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தளபதி விஜய் நடிப்பில் உருவான இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கி இருப்பார்.

ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் – நடிகர் சூர்யா மற்றும் அசின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கஜினி. இதில் சூர்யாவுக்கு மெமரி லாஸ் இருக்கும். இவர் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை நடப்பவற்றை மறந்துவிடுவார். வித்தியாசமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யா நடிப்பில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற இந்தப் படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கி இருப்பார்.

ஈகோ – எஸ்.ஜே சூர்யாவின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் குஷி. காதலை தாண்டிய ஈகோ இதுதான் இந்தப் படத்தின் கரு. படம் முழுவதும் ஈகோவினால் சண்டையிடும் நாயகன், நாயகி இறுதியில் காதலை உணர்ந்து இணைகின்றனர். நல்ல ரொமான்டிக்கான இந்த படத்தில் விஜய், ஜோதிகா இணைந்து நடித்திருந்தனர்.

ஸ்பிளிட் பர்சனாலிட்டி –  விக்ரம் மாறுபட்ட  நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அந்நியன். ஒருவரிடம் தோன்றும் மூன்று மாறுபட்ட குணாதிசயங்களை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். இதில் விக்ரம் அம்பி, அந்நியன், ரெமோ என்ற மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். மக்களை கவர்ந்த இத் திரைப்படம் பல விருதுகளை பெற்று சாதனை படைத்தது.

போலீஸ் கஸ்டடி– தேசிய விருது விழாவில் சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட படம் விசாரணை. ஒரு கொலை வழக்கை முடிக்க போலீஸ், 4 அப்பாவி இளைஞர்களை அதில் சிக்க வைக்கின்றனர். போலீஸ் கஸ்டடியில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தத்ரூபமாக இதில் காட்டப்பட்டிருக்கும். மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது இப்படம்.

- Advertisement -spot_img

Trending News