செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

திடீர் ட்ரெண்டாகும் சுற்றுலா தளம்.. ஒரு நாட்டின் வருமானத்தை மாற்றிய அஜித்.!

Ajith – Vidamuyarchi: நடிகர் அஜித்குமாரை பொருத்தவரைக்கும் அவருடைய படங்கள் வெற்றியா அல்லது தோல்வியா என்பதை தாண்டி அவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். அஜித்தின் படம் வெளிவரவே இல்லை என்றாலும் அவரை கொண்டாடுவதற்கு அன்பான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் தான் அவர் இன்று வரை முன்னணி ஹீரோவாகவும் இருக்கிறார்.

அஜித்துக்கு சமீபத்தில் கடந்த பொங்கல் அன்று துணிவு படம் ரிலீசானது. அதைத் தொடர்ந்து அவருடைய 62 ஆவது படமான விடாமுயற்சியின் சூட்டிங் சத்தம் இல்லாமல் அஜர்பைஜானில் நாட்டில் நடைபெற்று வருகிறது. திரிஷா, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு துபாயில் உள்ள அஜர் பைஜானில் நடைபெற்றிருக்கிறது.

அஜர்பைஜானில் படப்பிடிப்பை முடித்துவிட்டு துபாய் விரைந்து இருக்கிறது படக்குழு. வலிமை படத்தின் போது கூட அஜித் பைக் ரேஸ் செல்லும் இடங்களில் எல்லாம் அவருடைய ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டார்கள். அதை தொடர்ந்து அவர் எங்கே ரைடு செல்கிறார் என்பதை தெரிந்து கொண்டு அந்த இடத்திற்கு செல்வதை அஜித் ரசிகர்கள் தற்போது தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

Also Read:விஜய்க்கு அஜித் சப்போர்ட் கண்டிப்பாக வேணும்.. சர்ச்சையை கிளப்பிய தயாரிப்பாளர்!

விடாமுயற்சி தற்பொழுது அஜர்பைஜானில் நடந்து வருகிறது. இதனால் தற்பொழுது இந்த நாட்டின் பெயரை கூகுளில் அதிகம் பேர் தேடி வருகிறதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இந்த ஊரின் பெயரை அதிகம் தேடுவதால் அஜர்பைஜான் டிரண்டாகி வருகிறது.

அதேபோல் விடா முயற்சி படத்தின் சூட்டிங் எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் அஜித் ரசிகர்கள் கூடி விடுகிறார்களாம். அஜர்பைஜானில் உள்ள கோபஸ்தான் என்னும் இடத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம். இங்கு தினமும் அஜித்தை பார்ப்பதற்கு அவருடைய ரசிகர்கள் கூட்டமாக வந்து போகிறார்களாம். இதனால் அஜர்பைஜான் நாடு டூரிஸ்ட் பிளேஸ் ஆக மாறிவிட்டதாம்.

அஜித் நடிக்கும் விடாமுயற்சி படம் தான் அஜர்பைஜானில் எடுக்கப்படும் தமிழ் படம் ஆகும். மகிழ் திறமேனி இயக்கும் இந்த படத்தை ஹாலிவுட் ரேஞ்சில் எடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நாட்டில் ஹிந்தி படங்கள் ஒரு சில காட்சிகள் பாடல்களுக்காக பயன்படுத்தி உள்ளார்கள். இதுவரை இந்திய சினிமாவில் முழு படத்தையும் இந்த நாட்டில் எடுப்பது விடாமுயற்சி மட்டுமே.

Also Read:விஜய்க்கு கை கொடுக்க வரும் ரஜினி, அஜித்.. இந்தியளவில் பரபரப்பாகும் முக்கிய புள்ளிகள்

Trending News