Sirakadikkum Asai Serial Hero Vetri Vasanth Engaement: விஜய் டிவியில் சிறகடிக்கும் ஆசை சீரியலில் ஆட்டநாயகனாக ஜொலித்து வரும் முத்து என்கிற வெற்றி வசந்த் நடிப்புக்கு மக்களிடம் ஏகப்பட்ட வரவேற்பு இருக்கிறது. இவருடைய நடிப்பு மட்டும் தான் சீரியலை பார்க்க தூண்டுகிறது என்பதற்கேற்ப ஏகப்பட்ட ரசிகர்கள் முத்துக்கு இருக்கிறார்கள். இந்த சமயத்தில் சமீபத்தில் தன்னுடைய காதலியை அறிமுகப்படுத்தும் விதமாக சில புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியானது.

அப்படி வெளியான ஒரு வாரத்திலேயே நேற்று நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது. அந்த வகையில் வெற்றி வசந்த் யாரை கல்யாணம் பண்ணப் போகிறார் என்றால் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் வைஷ்ணவி சுந்தரை தான் காதலித்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் இணையத்தில் புகைப்படங்கள் வைரலாகி கொண்டு வருகிறது.

இவர்களுடைய ஜோடி பொருத்தத்தை பார்த்ததும் மக்கள் ரொம்பவே அருமையாக இருக்கிறது. அத்துடன் பாரம்பரியமாக உங்களுடைய நிச்சயதார்த்தத்தை பார்க்கும் பொழுது மனசுக்கு நிறைவாக இருக்கிறது. இந்த மாதிரி எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இவர்களுடைய நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றிருக்கிறது.

இந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய சொந்தக்காரர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து இவர்களுடைய திருமணத்தை கூடிய விரைவில் மிகப்பிரமாண்டமாக நடத்துவதற்கு பிளான் படி வைத்திருக்கிறார்கள். சின்னத்திரை பொருத்தவரை சீரியல் நடிகர்கள் நடிகைகளை காதலித்து கல்யாணம் பண்ணுவது காலங்காலமாக நடந்து வருகிறது. அவர்களைப் போல இவர்களும் சந்தோஷமான ஒரு இல்லற வாழ்க்கையில் வாழ்வதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம்.
