வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

காஞ்சனா படத்தால் வாழ்க்கையே போச்சு என கதறும் திருநங்கை.. கண்டு கொள்ளவில்லையா லாரன்ஸ்?

Raghava Lawrence: நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸின் பேய் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு டிரெண்டை உருவாக்கியது. அவரைப் பார்த்து நிறைய இயக்குனர்கள் பேய் படங்களை எடுக்க ஆரம்பித்தார்கள். இதில் முனி படத்திற்கு பிறகு அவர் எடுத்த காஞ்சனா சீரிஸ் அத்தனையுமே மிகப்பெரிய வெற்றி பெற்றது.

லாரன்ஸ் இது போன்ற படங்களின் ஒவ்வொரு பாகத்திலும் சமூக விழிப்புணர்விற்காக பேய் கேரக்டரை ஒவ்வொரு விதமாக காட்டியிருந்தார். காஞ்சனா ஒன்றில் திருநங்கைகளை பற்றிய விழிப்புணர்வு, காஞ்சனா 2வில் ஊனமுற்றவர்கள் பற்றிய விழிப்புணர்வு, காஞ்சனா 3 ஆதரவு குழந்தைகளை பற்றிய விழிப்புணர்வு என திகில் கதைகளை கூட இதுபோன்ற மெசேஜ் உடன் கொடுத்திருக்கிறார்.

Also Read:கடைசி நேரத்தில் ஹீரோவை மாற்றிய 5 படங்கள்.. அட ரோலக்ஸ் கேரக்டரில் நடிக்க வேண்டிய ஹீரோ இவரா!

காஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் திருநங்கைகளை பற்றிய விழிப்புணர்வு கதையை எடுத்த ராகவா லாரன்ஸ், ரொம்ப வித்தியாசமாக சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரை திருநங்கை கேரக்டரில் நடிக்க வைத்திருந்தார். இது தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. காஞ்சனா கேரக்டரில் நடித்த சரத்குமாரின் வளர்ப்பு மகளாக அந்த படத்தில் நடித்தவர் தான் திருநங்கை திவ்யா. இவருடைய சமீபத்திய பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திவ்யா தன்னுடைய பேட்டியில் காஞ்சனா திரைப்படத்தில் நடித்தது தான் செய்த மிகப்பெரிய தவறு என்றும், இந்த படத்தில் நடித்ததன் மூலம் கோடி கணக்கில் சம்பாதித்து விட்டதாக பலரும் நினைத்துக் கொள்கிறார்கள் என்றும் சொல்லி இருக்கிறார். மேலும் இந்த படத்தில் நடித்த பிறகு இவருக்கு வேறு எந்த வேலை வாய்ப்புகளும் கிடைக்கவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்.

Also Read:தீபாவளிக்கு ரேஸில் மோதிக் கொள்ளும் 3 டாப் ஹீரோக்கள்.. பரபரப்பாக வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் அப்டேட்

இந்த படத்தில் நடிக்காமல் சாதாரணமாக இருந்திருந்தால் கூட எனக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்திருக்கும். ஆனால் இப்போது எந்த வேலை வாய்ப்புகளும் இல்லாமல், வருமானத்திற்கு ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டிருப்பதாக சொல்லி இருக்கிறார் திவ்யா. இவர் மட்டுமில்லாமல் பல நடிகர் நடிகைகளுக்கும் இதுதான் நிலைமை. பொருளாதாரத்திற்காக அவர்களால் சாதாரண வேலை என்று எதிலும் இறங்க முடியாமல் இருக்கிறது.

உதவி தேவைப்படுபவர்கள், ஆதரவற்றவர்கள் எத்தனையோ பேர் ராகவா லாரன்ஸ் மூலம் நிறைய உதவியை பெற்றிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது அவருடைய படத்தின் நடித்த திருநங்கை திவ்யாவிற்கு இப்படி ஒரு நிலைமை வந்தது லாரன்ஸ்க்கு தெரியுமா, திவ்யா அவரை அணுகி ஏதாவது உதவி கேட்டாரா, திவ்யா கஷ்டப்படுவது தெரிந்தும் ராகவா லாரன்ஸ் கண்டு கொள்ளாமல் இருக்கிறாரா என்று நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன.

Also Read:ஊருக்கு மட்டும் தான் உபதேசம் போல.. நம்பி வந்தவர்களை நடுத்தெருவில் நிப்பாட்டிய ராகவா லாரன்ஸ்

Trending News