வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

டைட்டிலுக்காக போடப்பட்டிருக்கும் பக்கா பிளான்.. கிழித்தெறியப்பட்ட அர்ச்சனாவின் உண்மை முகம்

BB7 Tamil: விஜய் டிவியின் ராஜா ராணி இரண்டாம் பாகத்தில் வில்லியாக நடித்து பிரபலமானவர்தான் அர்ச்சனா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என, நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே செய்திகள் பரவினாலும், அவர் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக தான் உள்ளே நுழைந்தார். ஆனால் இன்று ஒட்டுமொத்த பிக் பாஸ் பார்வையாளர்களிடமும் அதிக ஆதரவை பெற்றிருப்பவர் இவர்தான்.

வீட்டிற்குள் வந்த ஒரு சில நாட்களில் கதறி அழுது கொண்டிருந்த அர்ச்சனா திடீரென பொங்கி எழுந்து பிரதீப்புக்காக பேசியது ஒட்டுமொத்த ஆடியன்ஸ்களையும் கவர்ந்தது. பிரதீப்புக்காக குரல் கொடுத்தது, அடுத்தடுத்து விசித்ராவுடன் இணைந்து கொண்டு மாயா, பூர்ணிமா, ஐஷு, நிக்சன் போன்றோரை வச்சு செய்தது அர்ச்சனாவை மொத்தமாக உச்சாணிக்கொம்பில் ஏற்றி சென்று விட்டது.

சமீப காலமாக சமூக வலைத்தளத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் அர்ச்சனாவை பற்றி தான் பேச்சு. ட்விட்டரில் அதிக ஹேஷ்டேக்குகள் அர்ச்சனாவிற்காக தான் இருக்கிறது. அர்ச்சனா தான் பிக் பாஸ் வீட்டின் உண்மையான டைட்டில் வின்னர் என்று இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி பார்ப்பவர்கள், பார்க்காதவர்கள் என அத்தனை பேர் மத்தியிலும் ஆழமாக பதிந்து விட்டது. அந்த அளவுக்கு அர்ச்சனா பெயர் வாங்கி விட்டார்.

Also Read:இதுக்கு மேலயும் பிக்பாஸ்ல குப்ப கொட்ட முடியாது.. 16 லட்சத்தோடு நடையை கட்டிய பீனிக்ஸ் பறவை

இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பி ஆர் டீம் பத்தி பேசியதே கிடையாது. ஆனால் இன்று பிக் பாஸ் அந்த தலைப்பை கொடுத்து பேச வைத்திருக்கிறார் என்றால் கண்டிப்பாக இந்த விஷயம் உண்மை என்பதால் தான். அர்ச்சனாவும் தனக்கு பி ஆர் டீம் இருப்பதை ஒத்துக் கொண்டார். இன்றைய லைவில் விஜய் டிவியை விட, அர்ச்சனாவுக்கு சமூக வலைத்தளத்தில் அதிக ஃபாலவர்கள் இருப்பதாக தினேஷ் சொல்லி இருக்கிறார்.

அர்ச்சனாவுக்கு பெருகும் ஆதரவுகள்

உண்மையை சொல்லப்போனால் அர்ச்சனா டைட்டிலை வின் பண்ண வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பக்காவாக பிளான் போட்டு உள்ளே வந்திருக்கிறார். விஜய் டிவியின் ப்ராடக்ட் என்பதால் எப்படியோ பேசி வைல்ட் கார்டு என்ட்ரி கேட்டிருக்கிறார். மொத்த நிகழ்ச்சியையும் பார்த்துவிட்டு, போட்டியாளர்களை பற்றி தெரிந்து கொண்டு, மக்களின் ஆதரவை யாருக்கு என்பதை புரிந்து கொண்டு தெளிவாக நகர்த்தி இருக்கிறார்.

பிரதீப்புக்கு அர்ச்சனா ரெட் கார்டு காட்டவில்லை என வெளியில் பெருமையாக பேசப்படுகிறது. உண்மையில் வெளியில் இருந்து பிரதீப்புக்கு இருக்கும் ஆதரவை பார்த்ததால் தான் அர்ச்சனா அவருக்கு அப்படி செய்யவில்லை. பிரதீப் பிரச்சனையை பெரிதாக எடுத்து பேசியதும் அவருடைய ரசிகர்களை தன் பக்கம் இழுக்கத்தான். அர்ச்சனா தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என சமூக வலைத்தளத்தில் அவருடைய பி ஆர் டீம் மக்களை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறது. அர்ச்சனாக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெறுக இதுதான் காரணம்.

Also Read:ஓட்டிங்கில் அர்ச்சனாவுக்கு டஃப் கொடுக்கும் போட்டியாளர்.. போற போக்க பாத்தா டைட்டில் வின்னர் ஆயிடுவார் போலையே!

Trending News