ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

எம்ஜிஆர் கழுத்திலிருந்த குண்டு நீக்கப்பட்டதா இல்லையா?. பல வருட ரகசியத்தை போட்டு உடைத்த செல்ஃபி சிவக்குமார்

MR Radha shot MGR: கடந்த 1967 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதியில் தமிழக வரலாற்றில் இருந்து அவ்வளவு எளிதாக யாருமே மறந்துவிட முடியாது. நடிகவேள் எம் ஆர் ராதா, மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை துப்பாக்கியால் சுட்டு விட்டு, தன்னைத்தானே சுட்டுக் கொண்ட தினம். இந்த சம்பவத்திற்கு பிறகு இதைச் சுற்றி நிறைய கதைகள் சொல்லப்படும். அதில் ஒன்றுதான் எம்ஜிஆர் கழுத்தில் எலும்பு பகுதியில் பாய்ந்த குண்டை வெளியில் எடுக்கவில்லை என்பது.

எம் ஆர் ராதா மற்றும் எம்ஜிஆர் இருவரும் நிறைய படங்களில் இணைந்து இருந்த போதிலும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகம் இருந்திருக்கிறது. இந்த பிரச்சனை முற்றியதன் விளைவுதான் இந்த துப்பாக்கி சூடு சம்பவம். எம்ஜிஆரின் முகத்தை நோக்கி வந்த குண்டு, அவர் தலையை கீழே குனிந்ததால் காது மற்றும் தாடை பகுதியில் பட்டதாக சொல்லப்படுகிறது.

எம்ஜிஆரை சுட்ட எம் ஆர் ராதா, அவருடைய நெற்றிலும் சுட்டுக் கொண்டார். இந்த விஷயத்தில் இதுவரை யாருக்குமே புரியாத ஒன்று, ஆபத்தான பகுதிகளில் உண்டு பாய்ந்தோம் எப்படி இருவரும் உயிர் பிழைத்தார்கள் என்பதுதான். இதற்கு தடையவியல் நிபுணர் ஒருவர் விளக்கம் கொடுத்திருக்கிறார். உண்மையிலேயே அந்த குண்டு சரியாக பாய்ந்து இருந்தால் இருவருமே உயிரிழந்திருப்பார்கள்.

Also Read:நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய ஜோ.. சூர்யாவுக்கே டஃப் கொடுக்கும் சொத்தின் மதிப்பு

துப்பாக்கியில் இருந்த குண்டுகள் 15 வருடங்களுக்கு முன்பே வாங்கப்பட்டது. அதை எம் ஆர் ராதா தன்னுடைய மேஜை டிராயரில் போட்டு வைத்திருந்திருக்கிறார். அடிக்கடி அந்த மேஜையை திறந்து மூடியதால் குண்டுகள் ஒன்றோடு ஒன்று உரசி கொண்டே இருந்திருக்கின்றன. இதனால் அந்த குண்டுகள் மீது இருந்த காட்ரேஜ் கேஸ் பிடிமானம் தளர்ந்து போனதுதான் இவர்கள் உயிர்பிழைப்பதற்கான காரணம்.

கழுத்து எலும்பிலிருந்து நீக்கப்படாத குண்டு

எம்ஜிஆருக்கு கழுத்து பகுதியில் குண்டுகள் இருந்ததால், நரம்பு மண்டலம் எதுவுமே பாதிக்காத அளவுக்கு அறுவை சிகிச்சை மிகவும் நேர்த்தியாக நடந்திருக்கிறது. ஒரு குண்டு மட்டும் கழுத்து எலும்பு பகுதியை ஒட்டி இருந்திருக்கிறது. அந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்தால் மொத்த நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும் என்பதால் அந்த குண்டு அந்த இடத்திலேயே இருக்கட்டும் என்று மருத்துவர்கள் முடிவெடுத்து இருக்கிறார்கள்.

எம்ஜிஆர் அந்த சிகிச்சையின் போது மருத்துவமனையில் பல நாட்கள் இருந்தார். ஒரு நாள் இருமலுடன் சேர்ந்து அவருக்கு வாந்தி வந்திருக்கிறது. அப்படி இருமிக் கொண்டே வாந்தி எடுத்த பொழுது, எம்ஜிஆர் காது வழியாக அந்த குண்டு வெளிவந்ததாக பழம்பெரும் நடிகர் சிவகுமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார்.

Also Read:இதுக்கு தான் மும்பையில செட்டில் ஆனோம்.. தலையாட்டி பொம்மையாக மாறிய சூர்யா

Trending News