வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சீமானுக்கு முன்பே விஜயலட்சுமி டேட்டிங் செய்த டிவி பிரபலம்.. நிச்சயதார்த்தம் முடிந்தும் சேர முடியாம போச்சு

பிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து பேமஸ் ஆனவர்தான்  நடிகை விஜயலட்சுமி. இவர் சுமார் 40-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இவர் பிறந்தது சென்னை என்றாலும் கர்நாடகாவின் படித்ததால் சுமார் 25 கன்னட படங்களில் நடித்திருக்கிறார்.

சமீப காலமாகவே இவர் அரசியல்வாதியும் நடிகருமான சீமானை குறித்து பல சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவிட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அதிலும் இவர் சீமானுக்கு முன்பே டிவி பிரபலத்தை டேட்டிங் செய்திருக்கும் தகவல் தற்போது கசிந்துள்ளது.

Also Read: தேவயானியை சித்திரவதை செய்த இயக்குனர்.. உண்மையை போட்டு உடைத்த விஜயலட்சுமி

விஜயலட்சுமி சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது, நடிகர் மற்றும்  டிவி தொகுப்பாளர் சுஜன் லோகேஷ்  என்பவரை காதலித்து வந்தார். அவருடன் டேட்டிங்கும் செய்திருக்கிறார். பின் குடும்பத்தார் பேசி நிச்சயதார்த்தம் செய்திருக்கிறார்கள். ஆனால் அது திருமணம் வரை செல்லவில்லை, பிரிந்து விட்டனர்.

அதன்பின் தான் விஜயலட்சுமி சீமானும் காதலித்து இருக்கிறார்கள். அவர்களும் குடும்பத்திற்கு தெரிந்து 2-3 வருடங்களாக காதலித்து லிவிங் டுகெதரில் இருந்துள்ளனர். அதற்கான புகைப்படம் வீடியோக்கள் சீமானுக்கு விஜயலட்சுமி அம்மா கேக் ஊட்டுவது, சிரித்து பேசுவது என பல புகைப்படங்கள் வீடியோக்கள் உள்ளன.

Also Read: அண்ணன் தம்பிகளின் பாசத்தை உருக வைத்த 5 படங்கள்.. தங்கச்சியை ராணி மாதிரி கொண்டாடிய சரத்குமார்

கடைசியில் சீமான் விஜயலட்சுமியை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார். இதற்கு அவர் கர்நாடகா பெண் என்பதுதான் காரணம் என்றும், தன்னை அடித்துக் கொடுமைப்படுத்தி துன்புறுத்தியதாகவும் விஜயலட்சுமி அவர் மீது குற்றம் சாட்டினார். இப்படி உயிருக்கு  உயிராய் காதலித்த சீமான் மற்றும் விஜயலட்சுமி இருவரும் எதனால் பிரிந்தனர் என  இன்று வரை தெரியவில்லை.

சீமான் விஜயலட்சுமியை வேண்டாம் என்று சென்று விட்டார். சீமானால் தான் அந்த காதல் பிரிந்ததா! சீமான் எதற்காக விஜயலட்சுமி விட்டு பிரிந்தார் என பல கேள்விகள் உள்ளன. அதற்கான விடையை  சீமான் அல்லது விஜயலட்சுமி இருவரில் ஒருவர் தான் சொல்ல வேண்டும் அப்போதுதான் உண்மை தெரியும்.

Also Read: ஓவர் அழிச்சாட்டியம் பண்ணும் 8 நடிகர்கள்.. விஜயகாந்த் தலைமையில் நடக்கும் ஆறு மணி அவதாரம்

Trending News