வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

A.வெங்கடேஷ் இயக்கத்தில் ஹிட் அடித்த 3 படங்கள்.. அடேங்கப்பா! தரமான கமெர்சியல் படமா எடுத்து தள்ளிருக்காரு

அங்காடி தெரு படத்தின் மூலம் முரட்டுத்தனமான வில்லனாக தமிழ் சினிமா ரசிகர்களை பயமுறுத்தியவர் A.வெங்கடேஷ். இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனராக வெளியிட்ட படங்களின் வரிசைகளை தற்போது பார்க்கலாம்.

1996-ல் வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் மகாபிரபு. இந்தப் படத்தில் சரத்குமார், சுகன்யா, வினிதா போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். எதிர்பார்த்த அளவு இந்த படம் ஓடவில்லை.

தளபதியை வைத்து நிலாவே வா, பிரசாந்தை வைத்து சாக்லேட், மீண்டும் தளபதியை வைத்து 2002-ல் பகவதி, சிம்புவுடன் கூட்டணி வைத்து குத்து, அர்ஜுனுடன் வல்லக்கோட்டை, பரத்தை வைத்து கில்லாடி, சரத்குமாருடன் இணைந்து சண்டமாருதம் என்று கிட்டத்தட்ட 22 படங்களை இயக்கியுள்ளார். இதில் 20 படங்கள் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை, ஆனாலும் இவர் இயக்கத்தில் வெற்றி பெற்ற 2 படங்களை பார்க்கலாம்.

ஏய்:  சரத்குமார், நமீதா, வடிவேலு, கலாபவன் மணி போன்ற பிரபலங்கள் நடிப்பில் 2004ல் வெளிவந்த படம் ஏய். ஆக்ஷன் மற்றும் மசாலா கலந்த இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. முக்கியமாக சரத்குமார் மற்றும் வடிவேலின் காமெடி ரசிக்கும்படியாக அமைந்தது. இந்த காமெடி காட்சிகளை இன்றளவும் ரிபீட் மோடில் பார்த்து வருகின்றனர். இந்த படத்தில் வரும் ‘அர்ச்சுனா அர்ச்சுனா’ என்ற குத்து பாடலில் மொத்த கவர்ச்சியும் இரக்கிருப்பார் நமீதா, இதனலே பிரபலமானது. இந்த படத்தின் வெற்றியை வைத்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

மலை மலை: அருண் விஜய் தமிழ் சினிமாவில் தத்தளித்துக் கொண்டிருந்த காலங்களில் அவருக்கென்று வெற்றி கிடைத்த படமாக மலை மலை பார்க்கப்படுகிறது. இந்த படம் சற்றும் எதிர்பார்க்காமல் ஹிட் அடித்தது.பிரபு, வேதிகா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்து இருந்தனர். இந்த படம் ஹிட் ஆனவுடன் உடனே அடுத்த படத்தை இந்த கூட்டணி தொடங்கியது அதுதான் மாஞ்சா வேலு.

மாஞ்சா வேலு : அருண் விஜய், தன்ஷிகா,சந்தானம், விஜயகுமார் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 2010ல் வெளிவந்த படம் மாஞ்சா வேலு. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கு முந்தைய வருடத்தில் வெளிவந்த மலை மலை என்ற படத்தின் கூட்டணியில் உருவானது தான் மாஞ்சா வேலு. அந்த படத்தின் தோல்வியை சரி செய்வதற்காகவே இந்த படம் எடுக்கப்பட்டது, இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் இயக்குனராக அங்கீகாரம் பெற்று விட வேண்டும் என்பதற்காக போராடி வரும் பல இயக்குனர்களில் A.வெங்கடேஷ் ஒருவர். அங்கீகாரம் கிடைத்து விட்டதா என்பதை ரசிகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். கடைசியாக நேத்ரா என்ற படத்துடன் இயக்கத்தை முடித்துக்கொண்டார், மீண்டும் தமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹிட் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

உங்க மைன்ட் வாய்ஸ் கேட்குது சினிமா இப்ப இருக்குற நிலைமையில இது வேறயா..போதுமட சாமி!

Trending News