வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

நாசரை போல நடிப்பு சூறாவளியாக வரவேண்டிய நடிகர்.. 80களில் வளர முடியாமல் போன முரளியின் நண்பர்

80s Tamil Cinema versatile actor: தற்போது தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இருக்கும் நாசர், 90களில் டாப் ஹீரோக்களின் படங்களில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்தவர். தேவர் மகன், குருதிப்புனல், பம்பாய் போன்ற படங்களில் இவருடைய நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கும்.

வில்லனாக மட்டுமல்லாமல் குணச்சித்திர கேரக்டர் என எது கொடுத்தாலும் அசால்டாக நடித்து அசத்தியவர். இவருக்கு எல்லா கேரக்டர்களும் அத்துபடி. நாசரை போல் 80களில் எல்லா கேரக்டர்களிலும் நடித்து வெளுத்து கட்டிய நடிகர் தான் பூவிலங்கு மோகன்.

கிட்டத்தட்ட 50 வருடங்களாக கலைத்துறையில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து கொள்ள போராடிக் கொண்டிருந்தவர் தான் நடிகர் பாபு மோகன். இவரை பூவிலங்கு மோகன் என்று சொன்னால் தான் சட்டென்று நினைவுக்கு வரும்.

Also read: தனிக்காட்டு ராஜாவாக வசூலை அள்ள போகும் கமல்.. பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் சூப்பர் ஹிட் படம்

நாசரைப் போல், 80களில் இருந்த வர்ஷடைல் (versatile) ஆக்டர்

பத்து வயதில் ஒரு நாடக நடிகராக மேடை நாடகத்தின் மூலம் தனது கலைப்பயணத்தை தொடங்கிய இவர், திரைப்படங்களில் அறிமுகமாகி பிறகு தொலைக்காட்சியில் சீரியல்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பூவிலங்கு மோகன், நடிகர் முரளிக்கு நெருங்கிய நண்பரும் கூட.

ஆனால் திறமை இருந்தும் இவரால சினிமாவில் எதிர்பார்த்த அளவு வளர முடியாமல் போனது தான் சோகம். இவரைப் பெரும்பாலும் இயக்குனர் கே பாலச்சந்தர் படங்களில் பார்க்க முடியும். கே பாலச்சந்தர் இயக்கிய தண்ணீர் தண்ணீர், புன்னகை மன்னன் போன்ற படங்களில் இவருடைய கேரக்டர் பெரிதும் பேசப்பட்டது. இப்போது படங்களைக் காட்டிலும் சீரியலில் தான் அதிகம் நடித்துக் கொண்டிருக்கிறார்.

வர்ஷடைல் (versatile) ஆக்டர் பூவிலங்கு மோகன்

Poovilangu Mohan-cinemapettai
Poovilangu Mohan-cinemapettai

Also read: நாசருக்கு நிகராக நடிக்கும் 5 ஹீரோக்கள்.. வில்லத்தனத்தில் நாசரை மிஞ்சிய முத்துப்பாண்டி

Trending News