சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

என் குடும்பத்தை ரொம்ப காயப்படுத்திட்டீங்க.. வேதனையுடன் ராஜன் அமீர் வெளியிட்டுள்ள வீடியோ

Director Ameer : நடிகர் அமீருக்கு சமீபகாலமாக மன வேதனை தரும்படி நிறைய நிகழ்வுகள் நடந்தேறி வருகிறது. அதன்படி சமீபத்தில் பருத்திவீரன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுடன் ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இப்போது அமீரின் இறைவன் மிகப்பெரியவன் படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கடத்தல் விவாகரத்தில் ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியானது.

இந்த சம்பவத்தை ஊடகம் வாயிலாக தெரிந்து கொண்டதாக அமீர் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அதோடு தவறு யாரு செய்தாலும் கண்டிப்பாக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து ஜாபர் சாதிக் மற்றும் அமீர் நெருங்கி பழகி வந்ததால் இருவரையும் இணைத்து வைத்து ஊடகங்களில் ரோல் செய்யப்பட்டு வீடியோக்கள் வெளியானது.

அதுவும் அமீரை விமர்சித்து நிறைய செய்திகள் வெளியானது. இதுகுறித்து மனவேதனையுடன் வீடியோ ஒன்றை அமீர் வெளியிட்டு இருக்கிறார். அதாவது மது, தப்பான தொழில், வட்டி ஆகியவற்றுக்கு எதிரான சித்தாந்தத்தை கொண்டவன் நான். அப்படி இருக்கையில் இது போன்ற தவறான குற்றச் செயல்களில் என்னை தொடர்பு படுத்தி பேசுவது வேதனையாக உள்ளது.

Also Read : சூர்யாவுக்கு பணம் எல்லாம் ஒரு விஷயமே இல்ல.. பாலாவை விட்டுட்டு அமீர் கூட சண்டை போட இதுதான் காரணம்

இதனால் என் பெயருக்கு களங்கம் விளைவிக்க முடியும். அதோடு எனது குடும்பத்தை மிகுந்த மன அழுத்தத்திற்கு தள்ளி காயப்படுத்த முடியும். இது தவிர வேறு எந்தப் பயனையும் உங்களால் அடைய முடியாது. மேலும் போலீசார் என்னை எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் நான் செல்ல தயாராக இருக்கிறேன்.

தப்பு செய்தவனுக்கு தானே பயம் வேண்டும் என்பது போல அமீர் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். வட சென்னையில் ராஜனாக கெத்து காட்டிய அமீரின் சொந்த வாழ்க்கையில் தொடர்ந்து இவ்வாறு ஏதாவது ஒரு பிரச்சனை சந்தித்து அதன் மூலம் தீர்வு கண்டு வருகிறார். அதேபோல் இந்தப் பிரச்சனைக்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கலாம்.

Also Read : அமீர்,சூர்யா திடீர் சந்திப்பு.. சர்ச்சைகளுக்கு இடையே எடுக்கப்பட்ட அதிரடி முடிவு

Trending News