புதன்கிழமை, ஜனவரி 8, 2025

BB8: சேனலுக்குள்ளயே PR டீம் வைத்திருக்கும் விஜய் டிவி போட்டியாளர்.. அப்போ ஓட்டு போடுறதெல்லாம் வேஸ்ட்டா!

Bigg Boss 8 Tamil: விஜய் டிவியின் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி முடிவடைய சரியாக எட்டு நாட்கள் தான் இருக்கின்றன.

இந்த நேரத்தில் விஜய் டிவியின் போட்டியாளர் ஒருவர் சேனலுக்குள்ளேயே பி ஆர் குழுவை வைத்திருக்கிறார் என ஆதாரத்துடன் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

92 வது நாள் ஆன இன்று முதல் ப்ரோமோ வெளியானது. வீட்டில் சௌந்தர்யா வெளியில் ஸ்ட்ராங்கான பி ஆர் கூட்டத்தை வைத்திருப்பதாக ஒவ்வொருவராக குற்றம் சாட்ட தொடங்கினார்கள்.

இதனால் சௌந்தர்யா ரொம்பவே கஷ்டப்பட்டு கதறி அழுது கொண்டிருக்கிறார். சௌந்தர்யாவுடன் நெருங்கிய தோழியாக இருந்த ஜாக்குலின் கூட அதே குற்றச்சாட்டை வைத்தார்.

PR டீம் வைத்திருக்கும் விஜய் டிவி போட்டியாளர்

இந்த புரோமோ வெளியாகிய கொஞ்ச நேரத்தில் ஜாக்குலின் மீது பெரிய அளவில் விமர்சனம் வந்திருக்கிறது. அதாவது அவருக்கு சேனலுக்குள்ளேயே பி ஆர் கூட்டம் இருக்கிறதாம்.

இவர்கள்தான் யார் எலிமினேஷன் ஆக வேண்டும் என்பதையே முடிவு செய்கிறார்களா. அதுமட்டுமில்லாமல் டாங்கிலி ரமேஷ், ஆகாஷ், ரியாஸ், கவிராஜ் அண்ணா அவர்களுடைய பெயர்களும் வெளியில் வந்திருக்கிறது.

மக்கள் விரும்பி பார்த்து வாரம் முழுக்க ஓட்டு போட்டு தங்களுக்கு பிடித்த போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

ஆனால் இது போன்ற செய்திகள் வெளி வருவது அந்த விளையாட்டின் மீதான நம்பிக்கையை கெடுக்கும் விதமாக இருக்கிறது.

Bigg Boss 8
Bigg Boss 8

Trending News