திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரெட் ஜெயிண்ட்டை எதிர்த்து களத்தில் குதித்த பிரபல நிறுவனம்.. சொன்ன தேதியில் மோதிப் பார்க்க ரெடியான வாரிசு

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தாலும், ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் இந்த படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

ஆகையால் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் வாரிசு படத்தின் தியேட்டர் உரிமைக்கு பல போட்டிகள் நிலவி வருகிறது. இந்த போட்டி ராக்போர்ட் முருகானந்தம், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் போன்ற பெரிய பெரிய நிறுவனங்கள் அதன் தியேட்டர் உரிமையை வாங்க போட்டி போட்டு வருகிறது.

Also Read: மறைமுகமாக ஆப்படித்த இளைய தளபதி.. ரெட் ஜெயிண்ட் மூவிஸ்சை பழிக்கு பழிவாங்கிய விஜய்

இந்நிலையில் இந்த உரிமை லலித்திடம் சென்றது. கடும் போட்டிக்கு பிறகு தமிழகத்தில் வாரிசு படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை சேர்ந்த லலித் குமார் பெற்றிருக்கிறார். மேலும் துணிவு படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனமும், வெளி நாடுகளில் லைக்கா நிறுவனமும் வெளியிட உள்ளது.

அதற்கேற்றார் போல் தமிழகத்தில் ரெட் ஜெயிண்ட்டை எதிர்த்து களத்தில் குதித்து இருக்கிறது லலித்தின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம். ஒரே நாளில் அஜித்தின் துணிவு மற்றும் வாரிசு படமும் ரிலீஸ் ஆகுவதால் இந்த வருட பொங்கல் பண்டிகை ரசிகர்களை ஆரவாரப்படுத்தி உள்ளது.

Also Read: ரிலீஸுக்கு முன்னரே கொட்டிய பணமழை.. ஜெட் வேகத்தில் எகிறபோகும் விஜய்யின் சம்பளம்

8 வருடங்களுக்குப் பிறகு திரையில் மோதிக் கொள்ளும் தல, தளபதி இருவரின் படங்கள் மட்டுமல்ல, அந்த படங்களை ரிலீஸ் செய்யும் உரிமையை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி இருக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கும் கடும் போட்டி நிலவ போகிறது.

எனவே வரும் ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் துணிவு படத்துடன், களத்தில் மோதிக்கொள்ள வாரிசு படமும் ரெடியாகிவிட்டது. அத்துடன் இந்தப் படத்தின் வசூலும் தாறுமாறாக இருக்கப் போகிறது என்று திரை விமர்சனங்கள் அனல் பறக்கும் விவாதத்தில் ஈடுபட உள்ளனர்.

Also Read: வாரிசு படத்தின் மொத்த பட்ஜெட் ரிப்போர்ட்.. இரண்டு மடங்கு அதிகம் சம்பளம் வாங்கிய விஜய்

Trending News