சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பல மாதங்களாக யோசித்து எடுக்கப்பட்ட முடிவா.? தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து பின்னணி

நட்சத்திர தம்பதிகளான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் நேற்று தங்களது விவாகரத்து முடிவை அறிவித்து அதிர்வலைகளை ஏற்படுத்தினார். கடந்த சில நாட்களாகவே அவர்கள் இருவரும் தனித்தனியான போட்டோக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தனர். இப்போதுதான் அந்த தனித்தனி போட்டோ பதிவிற்கான அர்த்தம் புரிகிறது.

கடந்த ஆறு மாத காலங்களாகவே இருவருக்கும் பிரச்சினை இருந்து வந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அப்பொழுதே பிரிந்து வாழ்வதாக முடிவெடுத்து விட்டனர். அதை வெளிப்படையாக அறிவிக்க இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக தனுஷ் எதையும் வெளியே பகிர்ந்து கொள்ளும் ஒரு கேரக்டர் கிடையாது. ஒவ்வொரு முறை ஐஸ்வர்யாவுடன் பிரச்சினை ஏற்படும்போது ஏதாவது ஒரு புதிய படத்தில் கமிட்டாகி, அதில் தனது முழு கவனத்தையும் செலுத்தி விடுவாராம்.

மேலும் தனுஷ் தனது அறிக்கையில் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது எனவும், இத்தனை ஆண்டு காலமாக நண்பர்களாக, துணையாக, பெற்றோர்களாக வாழ்ந்தோம். தற்போது நாங்கள் ஒன்றாக பிரிய உள்ளோம்.

எங்களை நாங்களே புரிந்துகொள்ள இந்த பிரிவு எங்களுக்கு தேவைப்படுகிறது. எங்களின் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி ஐஸ்வர்யாவும் இதே அறிவிப்பை வெளியிட்டு அவர்களது பிரிவை உறுதி செய்துள்ளார்.

இந்த முடிவை அவர்கள் இருவரும் பல மாதத்திற்கு முன்பே எடுத்து விட்டதாகவும், தற்போதுதான் அதற்கான நேரம் வந்ததாகவும், அவர்களின் நெருங்கிய உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி அவர்கள் இருவரின் சொந்த முடிவு இது, இதில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்றும் கூறுகின்றனர்.

Trending News