திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பொட்டி பாம்பாய் அடங்கிய ஹீரோ.. காரியத்தை சாதித்துக் கொண்ட மனைவி

ஹீரோ ஒருவர் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இப்போது பிரம்மாண்ட படம் ஒன்றை மட்டும் நம்பி இருக்கும் ஹீரோ மனைவியின் பேச்சைக் கேட்டு அக்கட தேசத்தில் குடியேறினார். அதற்கான காரணம் என்னவென்றால் குழந்தைகளின் படிப்புக்காக சென்றனர் என்று கூறப்பட்டது.

ஆனால் நடிகையோ இப்போது குழந்தை வளர்ந்த பின்பு சினிமாவில் தலைகாட்ட ஆரம்பித்துவிட்டார். தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் திருமணமான பின்பு மார்க்கெட் என்பது குறைவு தான். மேலும் நடிகைக்கு வயது ஆகிவிட்டதால் இப்போது வரவேற்பு கிடைக்கவில்லை.

ஆனால் பாலிவுட் பக்கம் எப்போதுமே முன்பு இருந்த நடிகைகளுக்கு மவுசு அதிகம். தனது கணவருக்கும் ஒரு வாய்ப்பு பாலிவுட்டில் வாங்கி கொடுத்து நடிகை அங்கு அழைத்துச் சென்றார். அதோடு நடிகையும் ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார்.

Also Read : இயக்குனர் முதல் கேமராமேன் வரை கேட்ட அட்ஜஸ்ட்மென்ட்.. வாய்ப்பை உதறித் தள்ளிய நடிகர்

மேலும் இத்துடன் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விடுவார் என்று நினைத்த நிலையில் தொடர்ந்து நடிகைக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இதுவே தமிழ் சினிமாவில் இருந்தால் நடிகரின் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் நிறைய படங்களில் நடிக்க முடியாது.

அதோடு மட்டுமல்லாமல் இங்கு உள்ளது போல் வரவேற்பும் கிடைக்காது. ஆகையால் சிறிது காலம் பாலிவுட்டில் கொடி கட்டி பறக்கலாம் என்ற முடிவில் தான் குழந்தைகளை காரணம் காட்டி நடிகை இங்கு குடியேறி இருக்கிறார். மேலும் நடிகையின் பேச்சுக்கு பொட்டி பாம்பாய் ஹீரோவும் அடங்கி இருக்கிறார்.

Also Read : அக்கட தேசத்திலும் வேலையை காட்டிய நம்பர் நடிகை.. அடித்து தொரத்தி விட்ட ஹீரோவின் மனைவி

Trending News