Kangana Ranaut: கங்கனா ரனாவத் , பிஜேபி கட்சியின் எம் பி ஆக ஜெயித்த 48 மணி நேரத்தில் அவருடைய கன்னத்தை பதம் பார்த்திருக்கிறார் ஒரு பெண் காவலர். விமான நிலையத்தில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் இந்தியா முழுவதும் பெரிய அளவில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தாம் தூம் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சையமானவர்தான் கங்கனா. மற்றபடி அம்மணியின் ஆட்டம் எல்லாம் பாலிவுட்டில் தான். சர்ச்சையான கருத்துக்கள் மூலம் பாலிவுட் சினிமாவை திணறடித்தவர்.
கிட்டத்தட்ட இந்தி உலகில் ஒரு குட்டி மீரா மிதுன் போல் சுற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு பாஜக கட்சியின் எம் பி சீட் கிடைத்தது எல்லோருக்குமே அதிர்ச்சி தான். அதிலும் தற்போது தேர்தலில் ஜெயித்து எம்பி ஆக பதவி ஏற்பது தலையில் இடியை இறக்கியது போன்ற ஒரு சம்பவம்.
சத்தீஸ்கரில் இருந்து டெல்லி செல்ல புறப்பட்டபோது விமான நிலையத்தில் வைத்து பெண் காவலர் ஒருவர் கங்கனாவின் கன்னத்தில் பளார் என அறைந்திருக்கிறார். கங்கனா இது குறித்து தன்னுடைய சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டு இருந்தார்.
கங்கனா கன்னத்தில், காங்கிரஸ் சின்னம்
பதவியேற்புக்கு முன்பே ஆட்டத்தை ஆரம்பித்த தலைவி
அந்த பெண் காவலரை விசாரித்த போது டெல்லியில் போராட்டம் பண்ணிய விவசாயிகளை கங்கனா தீவிரவாதிகள் என குறிப்பிட்டது தான் தன்னுடைய கோபத்திற்கு காரணம் என தெரிவித்திருக்கிறார். அந்த பெண் காவலரின் அம்மாவும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டே இருக்கிறார்.
நூறு ரூபாய்க்காக விவசாயிகள் போராட்டத்தில் ஆட்கள் சேர்க்கப்படுகிறார்கள் என்ற விமர்சனத்தையும் பங்கனா வைத்திருந்திருக்கிறார். இதனால் தான் கங்கனாவை பார்த்த பெண் காவலர் உணர்ச்சிவசப்பட்டு அவரை தாக்கி இருக்கிறார்.
எதற்காக அடி வாங்கினோம் என தெரிந்து இருந்தோம் கங்கனா மீண்டும் அந்தப் பெண் காவலர் சம்பவத்தை பற்றி பேசும் பொழுது தீவிரவாதம் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி இருக்கிறார். பஞ்சாபில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடுவதாக மீண்டும் ஒரு சர்ச்சையான கருத்தை பதிவிட்டு இருக்கிறார்.
இந்த கருத்துக்கு எதிர் வினைகள் எப்படி இருக்கும் என இனிவரும் காலங்களில் தான் தெரியும். கங்கனா ரணாவத்தை அறைந்த பெண் காவலரை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். எம்பி ஆக பதவி ஏற்பதற்கு முன்பே நடிகை கங்கனா தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்து விட்டதாக பலரும் அவரை தற்போது வசைப்பாடி வருகிறார்கள்.