வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

பாக்கியலட்சுமி கோபிக்கு சூனியம் வைப்பதாய் போனில் மிரட்டிய பெண்.. இது என்னடா ராதிகா புருஷனுக்கு வந்த சோதனை?

Baakiyalakshmi: தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் பெண்கள் அதிகம் விரும்பி பார்க்கும் ஒன்று பாக்கியலட்சுமி. நடுத்தர வர்க்கத்து குடும்பப் பெண்ணாக கஷ்டப்படும் கதாநாயகியை மையமாக வைத்து வந்த கதை என்பதால் பெண்களிடையே அதிக வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது.

தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள், இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவன், மாமியார் மாமனாரை பார்த்துக் கொள்வது, சொந்தத் தொழிலில் முன்னேறுவது என பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் நெஞ்சை கொள்ளை கொண்டு இருக்கிறது.

அதே நேரத்தில் இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கணவராக நடிக்கும் கோபி கேரக்டரை திட்டாத ஆட்களே இல்லை. அந்த அளவுக்கு சிறப்பாக நடிக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். திருமணமான இரண்டு மகன்கள், கல்லூரியில் படிக்கும் மகள் இருக்கும்போதே தன்னுடைய கல்லூரி காதலியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார் இந்த கோபி.

என்னடா ராதிகா புருஷனுக்கு வந்த சோதனை?

அதிலும் காதல் மனைவி ராதிகாவிடம் சிக்கிக் கொண்டு இவர் படாத பாடுபடும் பொழுது வயிறு குலுங்க சிரிக்க தோன்றும். அதே நேரத்தில் பாக்யாவுக்கு எதிராக இவர் செய்யும் சில்மிஷ வேலைகள் வயிற்றெரிச்சலை கிளப்பும்.

கோபி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் சதீஷுக்கு யாரோ ஒரு பெண் தொடர்ந்து போன் கால் செய்து சூனியம் வைப்பதாக மிரட்டி இருக்கிறார். அதே நேரத்தில் அவருடைய வீட்டு வாசலில் ஏதோ மந்திரம் செய்தது போல எலுமிச்சை பழத்தை வைத்து எல்லாம் செய்து இருக்கிறார்கள்.

இது குறித்து நடிகர் சதீஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு திருப்பதிக்கு சென்ற சதீஷ் உடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள பெண் ஒருவர் விரும்பி இருக்கிறார். ஆனால் சதீஷ் ஃபோட்டோ எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டாராம். இதனால்தான் அந்தப் பெண் இந்த வேலையை செய்ததாக சொல்லப்படுகிறது.

- Advertisement -spot_img

Trending News