வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கண்ணகி போல் நியாயம் கேட்டு வந்த சக்காளத்தி.. பாக்கியலட்சுமி வீட்டையே புரட்டி போடும் சம்பவம்

Baakiyalakshmi Serial: விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் இப்போது சக்காளத்தி சண்டை சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. இந்த தொடர் முழுக்க இரண்டு பொண்டாட்டி கதையை வைத்து உருட்டிக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது செழியனின் வாழ்க்கையில் புயல் காற்று வீச இருக்கிறது.

தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணிடம் சபலதால் தப்பு செய்துவிட்டு செழியன் இப்போது எப்படி அதில் இருந்து தப்பிப்பது என்று தெரியாமல் மாட்டிக் கொண்டு முழித்து வருகிறார். இந்த விஷயம் இப்போது பூதாகாரம் எடுத்துள்ளது. அதாவது இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரிந்துள்ள நிலையில் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அதற்குள்ளாகவே கோபத்தின் உச்சிக்கு சென்ற மாலினி நேரடியாக பாக்யா வீட்டுக்கு வந்து கத்துகிறார். கண்ணகி எப்படி நியாயம் கேட்டு வந்தாரோ அதேபோல் தான் ஆக்ரோஷத்துடன் வந்த மாலினி வீட்டையே இரண்டாகி விடுகிறார். இதைப் பார்த்த செழியன் பேய் அறைந்தது போல் அரண்டு போய் இருக்கிறார்.

Also Read : மாரிமுத்து இல்ல டிஆர்பியும் இல்ல இழுத்தடிக்கும் எதிர்நீச்சல்.. திக்கு திசை தெரியாமல் தடுமாறும் ஜீவானந்தம்

இப்போது கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் அதற்கு காரணம் செழியன் தான் என ஒரு பெரிய குண்டை தூக்கி போட உள்ளார். இதனால் ஜெனி இப்போது இந்த விஷயம் தெரிந்தால் என்ன முடிவு எடுப்பார் என்ற பரபரப்பான விருப்பங்களுடன் பாக்கியலட்சுமி தொடர் சென்று கொண்டிருக்கிறது. ஏனென்றால் செழியன் ஜெனியை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் திருமணத்தில் பல பிரச்சனை வந்த நிலையில் பாக்கியா தான் சுமுகமாக திருமணத்தை முடித்து வைத்தார். இப்படி இருக்கும் நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கும் விஷயம் தெரிந்தால் கண்டிப்பாக ஜெனி நிலை குலைந்து போய் விடுவார். அதுவும் இப்போது ஒரு கைக்குழந்தையுடன் இருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் ஈஸ்வரி எப்போதுமே தனது மகன் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு ஆதரவாக பேசி வரும் நிலையில் அவரது வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது என்பது போல தான் இப்போது செழியன் செய்திருக்கும் காரியத்தால் ஒட்டுமொத்த குடும்பத்தின் நிம்மதியும் போக இருக்கிறது.

Also Read : கதை கிடைக்கலைன்னா சீரியலை மூடுங்கடா எங்க உசுர வாங்காதீங்க.. மட்டமாக உருட்டும் பாக்கியலட்சுமி

Trending News