தல அஜித் எப்போதுமே யாராவது உதவி என்று கேட்டால் செய்யாமல் இருக்க மாட்டார். ஆனால் ஒரு இளம்பெண் அஜித்தை பற்றியும் அவரது மேலாளர் பற்றியும் அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக அவ்வப்போது படப்பிடிப்பு தள்ளி கொண்டே செல்கிறது. இதற்கிடையில் ஒரு வருடத்திற்கு முன்பு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள பிரபல மருத்துவரைச் சந்திப்பதற்கான அஜித்தும் அவரது மனைவி ஷாலினியும் சென்றுள்ளனர்.
அப்போது அவர்களுக்கே தெரியாமல் அவரை பர்சானா என்ற பெண் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரல் ஆகியுள்ளது. இதனால் அஜித் தரப்பிலிருந்து உடனடியாக அந்த வீடியோ எடுத்தது யார் என்பதை விசாரித்து வேலையை விட்டு நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதனால் வேலை இல்லாமல் கடந்த ஒரு வருடமாக திண்டாடி வந்துள்ளார் அந்த பெண்மணி. இதன் காரணமாக தல அஜித்தை சந்தித்து மன்னிப்பு கேட்டு விட்டு மீண்டும் அந்த வேலையில் சேருவதற்கு உதவி செய்யுமாறு கேட்க பலமுறை அஜித் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவர் வாசலிலேயே விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.

இதனால் அந்த பெண் தென்னிந்திய திரைப்பட சங்கம் மூலமாக தல அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவை தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அஜித்திடம் கூறுவதாக உறுதி கொடுத்துள்ளார் சுரேஷ் சந்திரா.

இந்நிலையில் சில நாட்கள் கழித்து அஜித்திடம் கூறியதாகவும் அவர் குழந்தையின் படிப்புக்கு வேண்டுமானால் பத்தாயிரம் தருவதாகவும், மற்றபடி வேலையில் சேருவதற்கு பரிந்துரை செய்ய மாட்டேன் எனவும் அஜித் கூறியதாக சுரேஷ் சந்திரா அந்த பெண்மணியிடம் கூறியுள்ள வாட்ஸ்அப் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் அந்தப் பெண்மணி ஒரு முறை தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறுகின்றனர்.

ஆனால் உண்மையில் இது அஜித்திற்கு தெரிந்து நடந்ததா? அல்லது தெரியாமல் நடந்ததா? என்பதுதான் தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. உண்மையாலுமே அஜித்திற்கு இந்த விஷயம் தெரிந்திருந்தால் கண்டிப்பாக இந்த மாதிரி செய்திருக்க மாட்டார் எனவும் அடித்துக் கூறுகின்றனர்.