புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

விஜய்யை விமர்சித்த போஸ் வெங்கட்டிற்கு பதிலடி கொடுத்த இளம் நடிகர்.. பெரிய ஹீரோக்களுக்கு கூட இது தோணலையே!

Vijay: நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு கடந்த ஞாயிறன்று வெற்றிகரமாக நடைபெற்றது. மாநாட்டிற்கு பிறகு விஜய்க்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன.

பொதுமக்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் என பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். எது எப்படியோ எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் தான் நினைத்ததை சாதித்திருக்கிறார் நடிகர் விஜய்.

இந்த நிலையில் மாநாடு நடைபெற்ற நள்ளிரவு நடிகர் மற்றும் இயக்குனர் போஸ் வெங்கட் இந்த மாநாடு குறித்து ட்வீட் ஒன்று பகிர்ந்திருந்தார். இது விஜயின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பொதுமக்களுக்கும் ஒருவித சஞ்சலத்தை கொடுத்தது என்றே சொல்லலாம்.

பெரிய ஹீரோக்களுக்கு கூட இது தோணலையே!

என்னதான் நமக்கு பிடிக்காதவர்களாக இருந்தாலும் இந்த அளவுக்கு விமர்சிக்க கூடாது என்பதுதான் எல்லோருடைய கருத்தாகவும் இருந்தது. அதிலும் உன் கூட எல்லாம் அரசியல் பண்ணனுமா என அவர் ஒருமையில் பேசியது பலருக்கும் மன வருத்தம் தான்.

இந்த நிலையில் சினிமா துறையை சேர்ந்த எந்த ஒரு பெரிய ஹீரோவும் போஸ் வெங்கட் பதிவிட்டது தவறு என சொல்லாமல் இருந்தது ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது. விஜய்யுடன் எங்களுக்கு நல்ல நட்பு இருக்கிறது என வெளியில் சொல்லிக் கொள்ளும் ஹீரோக்கள் கூட இதைப்பற்றி வெளியில் பேசவில்லை.

ஆனால் இளம் நடிகர் ஒருவர் இது பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். காக்கா முட்டை, டிமான்டி காலனி, சூது கவ்வும் போன்ற படங்களில் நடித்து தனக்கான நிலையான இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் ரமேஷ் திலக். இவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் போஸ் வெங்கட்டின் பதிவை மேற்கோள் காட்டி, தப்புனா நீங்க இப்படி சொல்லக்கூடாது நா என பதிவிட்டு இருக்கிறார்.

இவருடைய பதிவிற்கு பலரும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். பரவாயில்லை நீங்களாவது இதை எதிர்த்து கேள்வி கேட்டிருக்கிறீர்களே என பலரும் தங்களுடைய ஆதங்கத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.

vijay
vijay
- Advertisement -spot_img

Trending News