திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பாடகி சுசித்ரா மீது ஹேமா கமிட்டியில் புகார்.. இளம் நடிகையின் பரபரப்பு வாக்குமூலம்

Mollywood Me Too: பின்னணி பாடகி, டப்பிங் ஆர்டிஸ்ட் என ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் பாடகி சுசித்ரா. ரேடியோ ஜாக்கி, தொகுப்பாளர் என பன்முக திறமை கொண்டவராக இருந்தார். சுச்சி லீக்ஸ் என்ற விஷயம் வைரலானதை தொடர்ந்து சுசித்ராவின் மொத்த புகழும் அப்படியே சரிந்து விட்டது.

கிட்டத்தட்ட ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாத அளவுக்கு போய்விட்டது. அதன் பின்னர் பிக் பாஸ் நான்காவது சீசனில் இவர் கலந்து கொண்டார். அதிலும் மக்களின் வெறுப்பை தான் சம்பாதித்தார். சில மாதங்களுக்கு முன்பு திடீரென இவர் கொடுத்த பேட்டி ஒன்று பெரிய அளவில் வைரலானது.

ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் போதை கலாச்சாரத்தால் தடுமாறுவதாக சுசித்ரா பேட்டி கொடுத்திருந்தார். கார்த்திக், தனுஷ், விஷால், கமலஹாசன் என நடிகர்களின் பெயர்களையும் பல நடிகைகளின் பெயரையும் அவிழ்த்துவிட்டு நிறைய சம்பவங்களை பற்றி பேசி இருந்தார்.

இளம் நடிகையின் பரபரப்பு வாக்குமூலம்

கிட்டத்தட்ட ஒரு இரண்டு மாதங்களுக்கு மீடியாக்களுக்கு தீனி போட்டவர் இவர்தான். ஓரளவுக்கு இந்த பிரச்சனை அடங்கியிருக்கும் நேரத்தில் தற்போது புதிய பூகம்பம் ஒன்று வெடித்திருக்கிறது. மலையாள சினிமா உலகை ஹேமா கமிட்டி அறிக்கை ஆட்டம் காண வைத்திருக்கிறது என எல்லோருக்கும் தெரியும்.

இந்த கமிட்டியில் இளம் நடிகை ஒருவர் பாடகி சுசித்ரா மீது புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். கேரளா கபே ஹாப்பி ஹஸ்பண்ட், போன்ற மலையாள படங்களில் நடித்தவர்தான் இளம் நடிகைரீமா கல்லிங்கல். இவர்தான் இப்போது பாடகி சுசித்ரா மீது புகார் கொடுத்து இருப்பது.

சுசித்ரா தன்னுடைய பேட்டி ஒன்றில் ரீமா தன்னுடைய சொந்த வீட்டில் போதை விருந்துகள் நடத்தியதாகவும், அதில் நிறைய இளம் பெண்கள் கலந்து கொண்டதாகவும் சொல்லி இருக்கிறார். ஆதாரம் இல்லாமல் தன் மீது இப்படி ஒரு குற்றத்தை சுமத்தி இருக்கும் சுசித்ராவை விசாரணை செய்ய வேண்டும் என ரீமா புகார் அளித்திருக்கிறார்.

சுசித்ரா எத்தனையோ பெரிய நடிகர்களை பற்றி பேசி இருந்தும் அவர்கள் எல்லாம் சைலன்ட் மோடில் இருந்தார்கள். ஆனால் இந்த இளம் நடிகை அவரை நேரடியாக ஹேமா கமிட்டியிலேயே கோர்த்து விட்டிருக்கிறார்.

மலையாள சினிமாவை கிடுகிடுக்கும் மீ டு பிரச்சனை

Trending News