தமிழ் சினிமாவில் கமர்ஷியல் அம்சம் கொண்ட திரைப்படங்களை எடுக்க பல இயக்குனர்கள் இருந்தாலும் வித்தியாசமான திரைக்கதையின் மூலம் சில இயக்குனர்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுவார்கள்.
அந்த வகையில் இயக்குனர் பாலாவுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. முன்னணி நடிகர்களின் பட ரிலீஸ் போல பாலா பட ரிலீஸுக்கு வரவேற்பு இருக்கும். ஆனால் கடந்த சில வருடங்களாக பாலா இயக்கிய படங்கள் ரசிகர்களை கவரவில்லை.
பாலா படங்களில் மிகவும் மெனக்கெட்டு நடிக்கும் நடிகர்களுக்கு ஆரம்பத்தில் வரவேற்பு கிடைப்பதும் அடுத்த சில வருடங்களிலேயே சினிமாவை விட்டு காணாமல் போவதும் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் பாலாவை முழுவதும் நம்பி சினிமாவில் களம் இறங்கிய நடிகை ஜனனி ஐயர்.
இன்ஜினியரிங் படித்த ஜனனி அய்யருக்கு மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியாவில் இருந்து வாய்ப்பு வந்ததாம். ஆனால் அதே நேரத்தில் பாலாவின் அவன் இவன் படத்தில் வாய்ப்பு கிடைக்க ஆஸ்திரேலியா செல்லும் வாய்ப்பை தூக்கிப் போட்டாராம்.
கண்டிப்பாக பாலா படம் தனக்கு தமிழ் சினிமாவில் திருப்புமுனையாக அமையும் என நம்பி அவ்வளவு பெரிய வாய்ப்பை அசால்டாக தூக்கிப் போட்டார். அவன் இவன் படம் வெளியான பிறகு சில படங்களில் அவருக்கு நாயகி வாய்ப்பு கிடைத்தது.
ஆனாலும் அவரால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக சோபிக்க முடியவில்லை. சரி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலாவது தனக்கு ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகும் என அதையும் முயற்சி செய்து பார்த்தார்.
தற்போது எடுத்த முயற்சிகளெல்லாம் தோல்வியை தரவே வேறுவழியின்றி தன்னுடைய தங்கையுடன் சேர்ந்து மாடலிங் பிசினஸில் இறங்க விட்டாராம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாடலிங் உடைகளைத் தானே அணிந்து தன்னுடைய கடைக்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறாராம் ஜனனி ஐயர். சமீபத்தில் ஜனனி ஐயர் தன்னுடைய பெயரில் இருந்து ஜாதியை நீக்கி ஜனனி என மாற்றியது ரசிகர்களிடையே நல்ல மரியாதையை பெற்றுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.