ஆபாவாணன் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கிய பங்காற்றியவர். அவர் சினிமா பயணத்தில் திரைக்கதை, பாடல் வரிகள் எழுதுவது, இசையமைப்பது, தயாரிப்பது என்று அனைத்து துறைகளிலும் திறமையாகக் கையாண்டு இன்றளவும் சினிமாவில் வளரும் பிரபலங்களுக்கு ஒரு முன்னோடியாக உள்ளார். இவர் திரைக்கதையில் த்ரில்லிங் நிறைந்ததாக இருக்கும்.
அந்த வகையில், இவர் படைப்பில் வெளிவந்து 100 நாட்களுக்கு மேல் வெற்றிகண்ட படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம்.
ஊமை விழிகள்
ஊமை விழிகள் 1986இல் ஆபாவாணன் தயாரித்து, எழுதிய முதல் படம் இந்த படத்தில் விஜயகாந்த், அருண்பாண்டியன், சந்திரசேகர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்ற பல பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். ஊமை விழிகள் படத்தின் ஒளிப்பதிவு, இசை, த்ரில்லர் காட்சிகளை பார்த்தால் கண்டிப்பாக மிரண்டு போவீர்கள்.
தியேட்டரில் 150 நாட்களுக்கும் மேல் திரையிடப்பட்டது, பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. ஊமை விழிகள் படத்தின் வெற்றியை வைத்து தெலுங்கில் மரண மந்திரம் என்று ரீமேக் செய்யப்பட்டது.
உழவன் மகன்
1987இல் ஆபாவாணன் கதை, திரைக்கதை எழுதி வெளிவந்தது உழவன்மகன். இந்த படத்தில் விஜயகாந்த், ராதிகா, ராதா, ராதாரவி போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படம் தியேட்டரில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது, பாக்ஸ் ஆபீஸ் சாதனை படைத்தது. கிராமத்து கதாபாத்திரத்தில் விஜயகாந்த் விவசாயியாக நடித்திருப்பார். விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையை இந்த படம் புரட்டிப்போட்டது என்றே கூறலாம்.
செந்தூரப்பூவே
1988ஆம் ஆண்டு விஜயகாந்த், ராம்கி, நிரோஷா, சந்திரசேகர், ஸ்ரீபிரியா போன்ற பிரபலங்கள் நடித்து வெளிவந்தது செந்தூரப்பூவே. இந்த படத்தை தயாரித்தார் ஆபாவாணன். இந்த படத்திற்காக விஜயகாந்த் சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச் சென்றார். பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது, இந்த படம் கிட்டத்தட்ட 200 நாட்களைத் தாண்டி திரையிடப்பட்டுள்ளது. 1988-ல் அதிக வசூலை ஈட்டிய படம் என்ற பெயரையும் பெற்றது. இந்த படத்தின் வெற்றியை வைத்து தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இணைந்த கைகள்
ஆபாவாணன் தயாரித்து, கதை எழுதி 90களில் மிக பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் இணைந்த கைகள். இந்த படத்தில் ராம்கி, அருண் பாண்டியன், நிரோசா, சிந்து, நாசர், செந்தில் போன்ற பல பிரபலங்கள் நடித்து இருந்தனர். இந்த படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை வைத்து இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது.
காவியத்தலைவன்
கதை, திரைக்கதை, தயாரித்து வெளிவந்து வெற்றி கண்ட படம் காவியத்தலைவன். இந்த படத்தில் விஜயகாந்த் ஜோடியாக பானு நடித்திருந்தார், அதுமட்டுமில்லாமல் நம்பியார், மனோரமா, மஞ்சுளா, நாசர் போன்ற பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இந்த படமும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இப்படி தமிழ் சினிமாவில் குறைந்த எண்ணிக்கையில் ஒரு சில படங்கள் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் எடுத்தாலும், அதில் மாபெரும் வெற்றி பெற்று 80களில் கொண்டாட பட்டவர் ஆபாவாணன். இன்றளவும் இந்த படங்களை ரசிகர்கள் திரும்பத்திரும்ப பார்க்கின்றனர், மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து நீங்களும் என்ஜாய் பண்ணுங்கள்.