புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

2021 தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு வியூகம் வகுத்த ஆதவ் அர்ஜுனா, அடுத்து தவெக-வில்.. சூடு பிடிக்கும் அரசியல் களம்!

Aadhav Arjunaa: மகாபாரதப் போரில் அர்ஜுனனின் தேரில் கண்ணன் இருந்ததால் பாண்டவர்களின் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கு சரிசமமாக அடுத்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் அமைந்துவிடும் போல. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என ஆதவ் அர்ஜுனா நேற்று தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருந்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஆறு மாத காலத்திற்கு தற்காலிகமாக நீக்கப்பட்டதற்கு பின் இந்த பதிவு வெளியாகியிருந்தது.

இதை தாண்டி இன்று அவர் வெளியிட்டிருக்கும் பதிவு தான் தமிழக அரசியல் களத்தில் பெரிய புரளியை கிளப்பி இருக்கிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளராக பதவி வகித்த இவர் தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார்.

இதை தொடர்ந்து இவர் மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணையாமல் தளபதியின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூடு பிடிக்கும் அரசியல் களம்!

அதற்கு சாட்சியாக இன்று ஒரு பதிவை போட்டு இருக்கிறார். அதில் ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம்! என்று பதிவிட்டு இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனத்தின் மூலம் திமுகவுடன் தேர்தல் பணியாற்றியதாகவும் இதில் அறிவித்திருக்கிறார்.

அத்தோடு ஒன் மைண்ட் இந்தியா நிறுவனத்தின் மூலம் தேர்தல் வியூகங்களை வகுத்ததாகவும், திமுகவின் தேர்தல் யுத்திகளை வகுத்ததாகவும் புகைப்படத்துடன் பகிர்ந்திருக்கிறார்.

2021 தேர்தல் களத்தில் பிரசாந்த் கிஷோருடன் இணைந்து பணியாற்றியதை பற்றியும் பகிர்ந்திருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் தன்னுடைய வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனத்தின் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் பணியாற்றியது மற்றும் அந்த கட்சியை சீரமைத்தது பற்றியும் பகிர்ந்து இருக்கிறார்.

திருச்சி சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் சனநாயக மாநாடு மற்றும் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மது ஒழிப்பு மாநாடு இரண்டு நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து நடத்தியதையும் தெரிவித்திருக்கிறார்.

அரசியலை அனைவருக்கும் ஆன இடமாக மாற்ற விரைவில் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனம் வீரநடை போட இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இவருடைய பதிவின் மூலம் அடுத்து தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய இருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

ஆதவ் அர்ஜுனாவின் நட்பு என்பது விஜய்க்கு கூடா நட்பு என ஒரு சிலர் விமர்சித்து வரும் நிலையில் விஜய் அவருக்கு வாய்ப்பளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -

Trending News