சமீபத்தில் முடிவடைந்த தமிழ் டிவி சீரியல்களில், ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சீரியலாக எதிர்நீச்சல் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக இதில் இடம்பிடித்த ஆதி குணசேகரன் கதாபாத்திரமும் அதில் நடித்த மறைந்த இயக்குநர், நடிகரான ஜி. மாரிமுத்துவும் தான். அவர் மறைவுக்கு பின்னர் இந்த கதாபாத்திரத்தில் எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி நடித்திருந்தார்.
மலையாளத்தில் ரீமேக் ஆன எதிர்நீச்சல்
தமிழில் சூப்பர் ஹிட்டடித்த எதிர்நீச்சல் சீரியல் தற்போது மலையாளத்தில் காணல் பூவு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. மலையாளத்தில் அமோக வரவேற்பை பெற்றிருக்கும் இந்த சீரியல் கடந்த 2022 முதல் சூர்யா டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியல் சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஸ்டிரீமிங் ஆகி வருகிறது. சன்டிவியில் ஒளிபரப்பான தமிழ் செல்வி, பிரியமான தோழி போன்ற சீரியல்களில் நாயகியாக நடித்த சாண்ட்ரா பாபு கானல்பூவு சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இரண்டாவது திருமணம் செய்யும் ஆதி குணசேகரன்
எதிர்நீச்சல் கதையில் வரும் குணசேகரன் கதாபாத்திரம், பெண்களுக்கு எதிராக தனது ஆளுமையை செலுத்தும் விதமாக அமைந்திருக்கும். அவருக்கு எதிராக வீட்டு பெண்கள் தங்களது சுயமரியாதையை இழக்காமல் போராடுவதே திரைக்கதையாக அமைந்திருக்கிறது.
ஆனால் மலையாளத்தில் இதற்கு முற்றிலும் எதிராக குணசேகரன் கதாபாத்திரம் அமைந்துள்ளது. குறிப்பாக பெண்களை அடிமைப்படுத்து காட்சிகள் சில மாற்றப்பட்டிருக்கும் நிலையில், குணசேகரன் இரண்டாவது திருமணம் போல் காட்சிகள் வெளிவந்துள்ளன.
எதிர்நீச்சல் 2 விரைவில்
தமிழில் சில காரணங்களால் அவசரமாக எதிர்நீச்சல் சீரியல் முடிக்கப்பட்டது. ஆனால் மலையாளத்தில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் குணசேகரன் – ஜனனி இடையிலான மோதலுடன் பரபரப்பாகவே சென்றுகொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ரசிகர்கள் கேட்பதனால், எதிர்நீச்சல் 2 சீக்கிரமே வெளியாக வாய்ப்புகள் உள்ளது. திருச்செல்வம் உதவியாளர் இந்த தொடரை இயக்க இருப்பதாகவும், நடிகை தேவையானியை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. கோலங்கள் சீரியலில் இவர்களுக்குள் ஒர்க் அவுட் ஆன கெமிஸ்ட்ரி, எதிர்நீச்சல் 2 விலும் தொடருமா என்ற கேள்வி வந்துள்ளது.