Vijay: அஜித் விஜய் பஞ்சாயத்து எல்லாம் தயாரிப்பாளர்களின் வியாபார தந்திரம் தான் என சொல்வது உண்டு.
ஆனால் ஆரம்ப காலகட்டங்களில் இந்த போட்டியின் மூலம் தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்க விஜய் முயற்சி செய்திருப்பது தற்போது தான் வெளிவந்திருக்கிறது.
விஜய் நடித்து அவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகர் தயாரித்து இயக்குனர் ரமணா இயக்கிய படம் தான் ஆதி. இந்தப் படத்தை முதலில் 2006 ஏப்ரல் 14ஆம் தேதி தான் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்.
அஜித் படத்துடன் ரிலீஸ் செய்ய வேண்டும்
அந்த சமயத்தில் அஜித் நடித்த பரமசிவன் படம் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
உடனே விஜய் மற்றும் அவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகர் இருவரும் இயக்குனர் ரமணாவிடம் இந்த படத்தை அஜித்தின் பரமசிவன் படத்தோடு தான் ரிலீஸ் செய்ய வேண்டும்.
அப்போதுதான் படத்தின் மீதான எதிர்பார்த்து அதிகரிக்கும் என அவருக்கு பிரஷர் கொடுத்திருக்கிறார்கள்.
படத்தை ஜனவரியில் ரிலீஸ் செய்ய ஓவர் பிரஷர் எடுத்துக்கொண்டு வேலை செய்திருக்கிறார். கடைசியில் ஆதி படம் தோல்வி அடைந்தது தான் மிச்சம் என ஆதங்கத்தில் பேசியிருக்கிறார்.