Ajith and Adhik: கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா என்று சொல்வதற்கு ஏற்ப அஜித்தின் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இரட்டிப்பு மடங்கு சந்தோஷத்தை கொடுக்கும் வகையில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தையும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தையும் அடுத்த ஆண்டு பொங்கல் மற்றும் ஏப்ரல் மே மாதங்களில் ரிலீஸ் பண்ணப் போகிறார்கள்.
அந்த வகையில் விடாமுயற்சியின் படத்தின் படப்பிடிப்பு அனைத்தையும் முடித்த நிலையில் தற்போது குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் அவ்வப்போது அஜித் செய்யும் விஷயங்களையும் படப்பிடிப்பில் எடுக்கும் புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
அதே மாதிரி இப்பொழுது வெளிவந்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தில் தீனா படத்தில் அஜித்தை பார்த்த அதே லுக்கில் இருக்கிறார். அதாவது அஜித் அவருடைய உடல் எடையை குறித்து ஆளே மாறி ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி லுக்கை கொண்டு வந்திருக்கிறார்.
அதே மாதிரி பக்கத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இருக்கிறார். இதற்கு முன்னதாக இயக்குனர் ஆதிக்கை பார்த்ததற்கும் இப்பொழுது பார்ப்பதற்கும் அப்படி வித்தியாசமாக இருக்கிறது. இப்பொழுதுதான் பிரபுவின் மருமகன் என்று சொல்லும் அளவிற்கு அவருடைய தோற்றத்தை மாற்றி கெடுத்துக்காட்டும் அளவிற்கு ஒரு தோரணையை கொண்டு வந்திருக்கிறார்.
பிரபுவின் மருமகன் என்றால் இப்படித்தான் இருக்கணும் என்பதற்கு ஏற்ப ஆதிக், பிரபுக்கு டஃப் கொடுக்கும் வகையில் மாறி இருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.