திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

அதட்டி உருட்டி அனுப்பி வைத்த குணசேகரன்.. கரிகாலனுக்கு டிமிக்கி கொடுத்த ஆதிரை

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், விருப்பமில்லாமல் கல்யாணம் நடந்தால் திருமணத்திற்கு பிறகு என்ன ஆகும் என்று அழகாக சொல்கிறார். கரிகாலன் என்னதான் பார்க்கப் பாவமாக நல்லவராக இருந்தாலும், ஆதிரைக்கு இந்த கல்யாணத்தின் மேல் ஈஷ்டம் இல்லை என்பது நன்றாகவே தெரியும். ஆனாலும் வலுக்கட்டாயமாக கல்யாணம் பண்ணினதற்காக இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் அனுபவித்து தான் ஆகணும்.

என்னதான் விவரம் தெரியாதவராக இருந்தாலும் ஒரு பொண்ணுக்கு சம்மதம் இல்லை என்றால் வற்புறுத்தக் கூடாது என்பது கரிகாலனுக்கு தெரிந்திருக்க வேண்டும். கல்யாணத்தை தான் விருப்பம் இல்லாமல் பண்ணியாச்சு, இனிமேலாவது ஆதிரை மனதில் இடம் பிடிப்பதற்கு என்ன விஷயங்கள் செய்யனுமோ அதையாவது பண்ணி இருக்கலாம்.

Also read: பாக்கியாவால் வில்லனாக மாறி புலம்பி தவிக்கும் கோபி.. உசுப்பேத்தி விடும் ராதிகா

அதை விட்டுவிட்டு ஆதிரையுடன் ஒன்று சேர வேண்டும் என்று இப்படி அலைவது எரிச்சலா தான் இருக்கும். அதிலும் எதற்கெடுத்தாலும் குணசேகரனை பஞ்சாயத்திற்கு கூப்பிட்டு சின்ன பிள்ளைத்தனமாக எல்லாத்தையும் சொல்வது பார்ப்பதற்கு எதார்த்தமாக இல்லை. ஆதிரை எவ்வளவு சொல்லியும் கேட்காமல், குணசேகரன் வலுக்கட்டாயமாக மிரட்டி முதல் ராத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால் ஆதிரைக்கு இதை தடுப்பதற்கு வேறு வழி இல்லாமல் கரிகாலனை சமாளிப்பதற்காக அருணுக்கும் எனக்கும் எல்லாமே முடிந்து விட்டது என்று பொய் சொல்லி கரிகாலனை நம்ப வைக்கிறார். இதற்கு அப்புறம் கரிகாலன் வாலை சுருட்டிக் கொண்டு ஓரமாய் உட்கார்ந்து ஒப்பாரி வைக்கிறார்.

Also read: கண்ணனை தண்டித்த நேரத்தில் பிறந்த குழந்தை.. மீண்டும் குவா சத்தம் கேட்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

மேலும் இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் உனக்கு தான் அவமானம் அதனால் மற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொள் என்று ஆதிரை, கரிகாலனை சரியாக பயமுறுத்தி விடுகிறார். அத்துடன் வெளியில் யார் கேட்டாலும் நல்லபடியாக முடிந்தது என்று சொல்ல சொல்கிறார். ஆனால் இது கொஞ்ச நாளைக்கு அப்புறம் அருண் காதுக்கு போனால் அவன் எப்படி இதை எடுத்துக் கொள்ளப் போகிறான்.

ஆதிரையுடன் சேர்வாரா இல்லை என்றால் சந்தேகப்படுவாரா என்பது தான் தெரியவில்லை.
கடைசியில் ஜான்சி ராணி குணசேகரன் வீட்டுக்கு வருகிறார். அவருக்கும் மற்றவர்களுக்கும் ஆதிரை கரிகாலன் ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்றுதான் புரியும். அடுத்ததாக ஜீவானந்தம் அப்பத்தாவின் சொத்தை என்ன பண்ணப் போகிறார் என்பது யூகிக்க முடியாமல் கதை வருகிறது.

Also read: செல்லா காசாக நிற்கும் குணசேகரன்.. கௌதமிடம் மொத்த பொறுப்பையும் ஒப்படைத்த ஜீவானந்தம்

Trending News