ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அஜித் காட்டும் ஸ்மார்ட்னெஸ் ஆதிக்கிடம் இல்லை.. குட் பேட் அக்லிக்கு வந்த கடும் சோதனை

அஜித் 30 வயது இளைஞன் போல் இருக்கும் போட்டோக்களை சமூக வலைதளத்தில், ஆதிக் வெளியிட்டுள்ளார். பெப்பர் அண்ட் சால்ட் ஹேர் ஸ்டைலுக்கு எண்டு கார்டு போட்டுள்ளார் அஜித். படத்தில் அஜித் காட்டும் ஸ்டைலை விட ஆதிக் காட்டும் மெத்தனம் தான் அதிகமாக இருக்கிறது.

ஆரம்பத்திலிருந்து குட் பேட் அக்லி படம் 2025 பொங்கலுக்கு ரிலீசாகும் என்ற கோணத்திலேயே சூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் படம் ஜவ்வாக இழுத்துக் கொண்டு போகிறது. இப்பொழுது இந்த படம் பொங்கலுக்கு வராது என ஆணித்தனமாக கூறுகிறார்கள்.

ஆதிக்கு இயக்கம் குட் பேட் அக்லி படம் பொங்கலுக்கு வருவது சந்தேகம் என்றும் அடுத்த ஆண்டு சம்மரில் தான் வெளிவரும் என தெரிகிறது. இந்த படத்திற்கான டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் இன்னும் வியாபாரமாகவில்லையாம். அதனால் படக்குழுவினர் இடையே உற்சாகமில்லை.

விடாமுயற்சி படம் முழுவதுமாக முடித்துவிட்டது. ஆனால் தீபாவளி ரிலீசுக்கு முன் கொஞ்சம் வேலை இருப்பதால் அந்த படம் வெளியாவதிலும் சிக்கல் உருவாகி இருக்கிறது. குட் பேட் அக்லி படமும் 400 கோடிகள் பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

இந்தப் படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. எல்லா மொழிகளில் இருந்தும் ஆர்டிஸ்ட்கள் நடித்து வருகின்றனர்.இந்த படத்தை தெலுங்கில் பெரிய நிறுவனமான மைதிலி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது. சுனில் மற்றும் நயன்தாரா இந்த படத்தின் பிரமோஷனுக்கு வருவதாக அக்ரிமெண்ட் போட்டு உள்ளனர்.

Trending News