திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

Ajith: தயாரிப்பாளர் தலையில் மிளகாய் அரைத்த ஆதிக்.. குட் பேட் அக்ளி படத்திற்கு ஆரம்பமே செய்யப்பட்ட சூழ்ச்சி

விடாமுயற்சி படத்தை ஒத்திவைத்துவிட்டு அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் படத்திற்கு வந்துவிட்டார். இந்த படத்தின் சூட்டிங் இரண்டு நாளைக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்திலே இந்த படம் கைநழுவி போகக்கூடாது என ஆதிக் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

எல்லா படங்களிலும் ஆரம்பத்தில் பூஜை போட்ட பின்னர் சில கலந்துரையாடல் காட்சிகள் தான் எடுப்பார்கள். ஆனால் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து ஒரு முழு சண்டைக்காட்சியை எடுத்து விட்டார். ஹைதராபாத்தில் இந்த காட்சிகள் படமாக்கப்பட்டது..

குட் பேட் அக்ளி படத்திற்கு ஆரம்பமே செய்யப்பட்ட சூழ்ச்சி

முன்பெல்லாம் படத்தின் கதை முழுமையாக ரெடியாகவில்லை என்றால் தயாரிப்பாளர் வேறு வேலையை பார்க்க சென்று விடுவார். அப்படி செல்லாமல் இருப்பதற்காக பாடல் மற்றும் சண்டை காட்சிகளை எடுத்து விடுவார்கள்.

ஆரம்பத்திலேயே சண்டை மற்றும் பாடல் காட்சிகள் எடுப்பதால் தயாரிப்பாளரை இந்த படத்தை விட்டு செல்லாமல் லாக் செய்து விடுவார்கள். படத்தை டிராப் ஆகாமல் இருப்பதற்கு இப்படி ஒரு முன்னேற்பாடு செய்வார்கள். சண்டை மற்றும் பாடல் காட்சிகளை முதலில் எடுக்கப்பட்டால் படத்தின் எந்த இடத்திலும் அதை ஒட்டி விடலாம்

குட் பேட் அக்ளி படத்தின் தயாரிப்பாளர் மைதிலி மூவி மேக்கர்ஸ். அவர்களைப் பொறுத்தவரை படத்தை டிராப் செய்வதற்கு வாய்ப்பே இல்லை. ஏற்கனவே அஜித்தின் விடாமுயற்சி படம் அந்தரத்தில் இருக்கிறது. அதேபோல் நிலமை இந்த படத்திற்கும் வந்துவிடக்கூடாது என எச்சரிக்கையாக இருக்கிறார் ஆதிக்.

Trending News