தமிழ் சினிமாவின் இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்தவர் தானே இயக்குனர் அமீர் சுல்தான். மதுரையில் பிறந்த இவர் தொடக்கத்தில் இயக்குனர் பாலாவின் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதன் பின்பு தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை இயக்கிய அமீர், கடைசியாக இயக்கிய ஒரே படத்தினால் தன்னுடைய மார்க்கத்தை இழந்துவிட்டார் என்ற செய்தி தற்போது சினிமா ரசிகர்களிடையே பெருமளவு பேசப்பட்டு வருகிறது.
ஏனென்றால், 2002ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா, திரிஷா, லைலா உள்ளிட்டோர் நடித்து வெளியான சூப்பர் ஹிட் படம்தான் ‘மௌனம் பேசியதே’. இந்தப் படம் வசூல் ரீதியாக முன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
கடந்த 2005ஆம் ஆண்டு தாய் மகனின் பாசப் போராட்டத்தை காண்பித்த ‘ராம்’ திரைப்படமானது ரசிகர்களிடம் அதிக கவனம் பெற்றது. இந்தப்படத்தில் ஜீவாவிற்கு அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இதில் ஜீவாவின் நடிப்பும் அட்டகாசமாக இருக்கும்.
தரமான சினிமா, அரிதான வாழ்வியல் படைப்பு என்று ரசிகர்களால் மட்டுமல்லாமல் விமர்சகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்ட திரைப்படம் தான், கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான அமீரின் ‘பருத்திவீரன்’. இந்தப் படம் தான் நடிகர் கார்த்திக்கு முதல் படம். பருத்திவீரன் படத்தில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் தனித்துவமாக காண்பிக்கப்பட்டு இருக்கும். இந்தப்படத்தில் இயக்குனர் அமீர் கிளைமாக்ஸ் காட்சிகளில் ரசிகர்களை புல்லரிக்க வைத்திருப்பார்.
வித்தியாசமான காதல் படைப்பான மௌனம் பேசியதே மற்றும் உளவியல் அம்சங்களை உள்ளடக்கிய க்ரைம் த்ரில்லர் திரைப்படமான ராம் ஆகிய இரண்டு படங்களை விட பருத்திவீரன் என்ற படத்தை இயக்கியதன் மூலம் மிக சிறந்த படைப்பாளியாக ரசிகர்களிடையே சிறந்த இயக்குனராக அமீர் பேசப்பட்டார். ஏனென்றால் பருத்திவீரன் படம் தான் அமீரின் மாஸ்டர் பீஸ் என்றே சொல்லாம்.
இப்படிப்பட்ட மூன்று சிறப்பான திரைப்படங்களை கொடுத்த அமீர், கடைசியாக இயக்கிய ஜெயம் ரவியின் ‘ஆதிபகவன்’ திரைப்படமானது படு தோல்வியை தழுவியது. அதன்பின்பு ஆர்யாவை வைத்து சந்தனத்தேவன் என்ற ஜல்லிக்கட்டு தொடர்பான திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.