சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

தமிழ் சினிமாவில் முதல் 1000 கோடி படமா கூலி இருக்கும்.. அடிச்சி சொல்றதுக்கும் காரணம் இருக்கு

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படம் தான் அதிக வசூல் செய்த படமாக பெஞ்ச்மார்க்காக உள்ளது. 2 வது இடத்திலும் அவரது ஜெயிலர் படம் தான் உள்ளது. இந்த சாதனையை எப்போது முறியடித்து தெலுங்கு, பாலிவுட் படங்களுக்கு தமிழ் சினிமா சவால் விடுக்கும்? என ரசிகர்கள், சினிமா விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர்.

விஜயின் தி கோட் படமும், சூர்யாவின் கங்குவா படமும் அந்த சாதனையை முறியடித்து 2 ஆயிரம் கோடி வசூல் குவிக்கும் என அப்படக்குழுவினர் எதிர்பார்த்தனர். சொல்லிக்கொள்ளும்படியாக எதுவும் அமையவில்லை.

எனவே தமிழில் இளம் நடிகர்கள் இருந்த போதிலும் மூத்த நடிகரான ரஜினி தான் அந்த 1000 கோடி சாதனையும் படைப்பாரா என கேள்வி எழுந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் – ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. இதில், ஸ்ருதிஹாசன், நாகார்ஜீனா, கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திரா ஆகியோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

அமீர்கான் – ரஜினி கூட்டணி 1000 கோடி வசூல் குவிக்குமா?

இப்படத்தில் அமீர்கானும் இணைந்துள்ளார். அமீர் கானுக்கு இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவர் கூலி படத்தில் ரஜினி உடன் நடிப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டார்களுள் ஒருவரான அமீர்கானின் தங்கல் படம் 2000 கோடி வசூலீட்டியதால், அவருக்கு என தனி மார்க்கெட் உள்ளது. அதனால் அவர் ரஜினியுடன் சேரும் கூலி படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பும், பிஸினஸும் அதிகரித்துள்ளது.

பான் இந்தியா படமாக உருவாகி வரும் கூலி படம் ரஜினி – அமீர்கான் கூட்டணியால் நிச்சயம் 1000 கோடி வசூலிக்கும் முதல் தமிழ் படமாக இருக்கும் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

நேற்று சன் டிவியின் யூடியூப் பக்கத்தில் ரஜினி பற்றிய கிளிப்ஸ் வெளியிடப்பட்டது. இன்று கூலி படத்தின் டீசர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த டீசர் புஷ்பா 2 டீசரின் சாதனையை முறியடிக்குமா என பார்க்கலாம்.

Trending News