வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஓவியாவிற்கு ஆரவ் கொடுத்த மருத்துவ முத்தம்.. மணி ரவீனாவை விட எல்லை மீறும் ஜோடி புறாக்கள்

Bigg Boss 7 maruthuva mutham: இதுவரை விஜய் டிவியில் வந்த பிக் பாஸ் சீசன்களிலேயே தற்போது ஒளிபரப்பாகி வருகின்ற சீசன் 7 ஆரம்பித்த உடனே சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. இதில் எத்தனை சீசன்கள் வந்தாலும் எப்போதுமே ஓல்ட் ஈஸ் கோல்ட் என்று சொல்வதற்கு ஏற்ப சீசன் 1 யாராலையும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு ஒவ்வொருவரும் தனித்துவமான கேரக்டருடன் மக்களுக்கு பரிச்சயம் ஆனார்கள். அதிலும் ஓவியாவிற்கு ஆர்மி வைத்து கொண்டாடும் அளவிற்கு பிரபலமானது.

அப்படிப்பட்ட ஓவியா பாதியிலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு போகும் சூழல் ஏற்பட்டது. அதற்கு காரணம் ஆரவ் மீது இருந்த அதீத காதல் தான். ஆனாலும் அவரை வீட்டில் தங்க வைப்பதற்காக முத்தத்தை ஆரவ் கொடுத்தார். அதனாலேயே மருத்துவம் முத்தம் என்கிற வார்த்தை மக்களிடம் மிகவும் ஃபேமஸ் ஆகிவிட்டது. அது தற்போது சீசன் 7லும் வந்திருக்கிறது.

அதாவது ஒவ்வொரு சீசன்களிலும் எப்படியாவது ஒரு காதல் ஜோடி புறாக்கள் வந்து விடுகிறார்கள். அந்த வகையில் இதில் மணி ரவீனா ரொம்பவே ஓவராக பேசி வருகிறார்கள். அவர்களுக்கு வேறு வேலையே இல்லை கடலை போடுவது மட்டுமே தினமும் செய்து வந்தார்கள். இந்த ஒரு விஷயம் அங்கு இருப்பவர்களுக்கும் மக்களுக்கும் வெறுப்பை உண்டாக்கும் அளவிற்கு இருந்தது.

ஆனால் தற்போது இவர்களை விட எல்லை மீறி கொண்டு வருகிறார்கள் நிக்சன் மற்றும் ஐஷு. இவர்கள் ஆரம்பத்தில் அண்ணன் தங்கை போல் தான் பேசிக்கொண்டு வந்தார்கள். ஆனால் போகப் போக இவர்களின் பேச்சுக்கள் ரொம்பவே வித்தியாசமாகவும், எல்லா இடத்திலும் இவர்கள்தான் அட்ராசிட்டி பண்ணுவது போல் தெரிகிறது.

அதிலும் நேற்றைய எபிசோடில் நிக்சன் மற்றும் ஐசு பேசிய விதம் அனைவரையும் ஆச்சரியப்படும் அளவிற்கு எல்லை மீறி இருக்கிறது. அதாவது இவர்களுக்கு இடையில் ஒரு கிளாஸ் கண்ணாடி மட்டும் தான் இருக்கிறது. ஆனால் அதிலேயே ஐசு முத்தத்தை கொடுத்து நிக்சனை வெட்கத்தில் உறைய வைக்கிறார். உடனே நிக்சன் பதிலுக்கு முத்தம் கொடுக்கப் போனார். ஆனால் அவருக்கு இருந்த வெட்கத்தால் பேச்சோடு நிறுத்தி விடுகிறார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நிக்சனை விளையாட்டில் இருந்து டைவர்ட் பண்றதுக்காக ஐஷுவை பயன்படுத்தி மாயா விரித்த வலை என்பது போல் தெரிகிறது. ஏனென்றால் இதற்கு முன்னதாக மாயா தான் ஐசுவிடம் நிக்சனை கவிழ்க்க வேண்டும் என்று பேசினார். அதன் பின்னரே ஐசு நடவடிக்கைகள் மொத்தமாக மாறி விட்டது. பாவம் இது தெரியாமல் நிக்சன் ஐஸ்விடம் மாட்டிக் கொண்டார்.

ஐசு முத்தத்தை கொடுத்து நிக்சனை வெட்கத்தில் உறைய வைக்கிறார்

bigg-boss-nixen-and-aisu

bigg-boss-nixen-and-aisu

Trending News