செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

உடல் எடையை ஏற்றி ஆர்யா நடித்த 4 திரைப்படங்கள்.. இதெல்லாம் அவருக்கு ரொம்ப ஸ்பெஷலாம்

தமிழ் சினிமாவில் திரைப்படங்களுக்காக ரிஸ்க் எடுத்து நடிக்கும் நடிகர்களில் ஆர்யாவும் ஒருவர். ஆரம்ப காலகட்டத்தில் இவர் காதல் மற்றும் ரொமான்டிக் திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். அதன் பிறகு அவர் ஆக்சன் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார்.

அப்படி அவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து அவர் ரசிகர்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அப்படி அவருக்கு சினிமாவில் திருப்புமுனையை ஏற்படுத்திய சில திரைப்படங்கள் இருக்கிறது.

அந்த திரைப்படங்களுக்காக ஆர்யா தன்னுடைய உடல் எடையை 120 கிலோ வரை ஏற்றி நடித்துள்ளார். அந்த படங்களுக்காக அவர் வொர்க் அவுட் செய்ய ஆரம்பித்து பின்னாளில் அவருக்கு அதுவே வழக்கமாகி போனது. இதனால் அவர் தற்போது வரை தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார். அப்படி அவருக்கு உடற்பயிற்சியின் மேல் ஆர்வத்தைத் தூண்டிய திரைப்படங்களை பற்றி காண்போம்.

நான் கடவுள் திரையுலகமே ஆர்யாவை பார்த்து வியந்த திரைப்படம் என்றால் அது இந்த படம்தான். இயக்குனர் பாலா இயக்கிய இந்தப் படத்தில் ஆர்யா, ருத்ரன் என்ற கேரக்டரில் ஒரு அகோரியாக நடித்திருப்பார். இதற்காக அவர் யோகாசனம் உள்ளிட்ட பல பயிற்சிகளை மேற்கொண்டார். மேலும் இப்படத்தில் அவர் தன் உடல் எடையை ஏற்றி பல சாகச காட்சிகளில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் உலகம் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய இந்த திரைப்படத்தில் ஆர்யா, அனுஷ்கா ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். பல புதுமையான காட்சிகளுடன் வெளியான இந்த படத்திற்காக ஆர்யா பல கடின உடற்பயிற்சிகளை மேற்கொண்டு நடித்தார்.

கடம்பன் இந்தப் படத்தில் ஆர்யா, கேத்ரின் தெரசா இணைந்து நடித்தனர். காட்டில் வாழும் பழங்குடி மக்களைப் பற்றிய இந்த கதையில் ஆர்யா ஒரு பழங்குடி இனத்தவராக நடித்திருப்பார். இதற்காக அவர் தன் எடையை 100 கிலோவுக்கு மேல் ஏற்றி நடித்தார். ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பில் உருவான இந்த திரைப்படம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

சார்பட்டா பரம்பரை குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடித்த இந்த திரைப்படம் அவருக்கு பெரிய புகழைத் தேடிக்கொடுத்தது. இதற்காக அவர் பல மணி நேரம் உடற்பயிற்சி செய்து தன் உடலை கடுமையாக மாற்றினார். 70 காலகட்ட வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.

இந்த நான்கு திரைப்படங்களிலும் ஆர்யா இதுவரை இல்லாத அளவுக்கு அதிக ரிஸ்க் எடுத்து நடித்திருப்பார். இதனால் இந்த திரைப்படங்கள் அனைத்தும் ஆர்யாவுக்கு ரொம்ப ஸ்பெஷலான திரைப்படங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Trending News