கடந்த 2010ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்திக், ஆண்ட்ரியா, பார்த்திபன் ரீமாசென் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஆகையால் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாவது பாகம் எப்பொழுது இயக்கப் போகிறீர்கள்? என்ற கேள்வியை ரசிகர்கள் பலரும் செல்வராகவனிடம் எழுப்பி வந்தனர்.
ஆனால் தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகத்தின் போஸ்டரை படத்தின் இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இந்த போஸ்டருடன் ‘இதுவரை கேட்டிருக்கும், காத்திருக்கும், என் அன்பு உள்ளங்களுக்கு இதோ! உங்கள் முன்னால்’ என்ற பதிவுடன் வெளியிட்டுள்ளார்.

மேலும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாவது பாகத்தில் நடிகர் தனுஷ் நடிப்பது உறுதியாகி உள்ளது. இந்தப் படம் செல்வராகவனின் வாழ்க்கையில் மிகப் பெரிய கனவு படம் என்பதால்,
இந்தப்படத்தின் முன் தயாரிப்பு பணிக்கு மட்டும் ஒரு வருடம் தேவைப்படுகிறதாம். எனவே 2024 ஆம் ஆண்டு ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்திற்காக தனுஷ் அயன் மேன் போல் உடம்பை ஏற்றுவதாக தெரிகிறது, ஏனென்றால் போஸ்டரில் பின் முதுகை காட்டி திரும்பி இருப்பது தனுஷ்தான் என்றால் கண்டிப்பாக உடம்பை ஏற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
