திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அவர் படத்தில் நடித்தே தீருவேன் என நியூயார்க்கில் இருந்து கிளம்பி வந்த அப்பாஸ்.. அப்பதான் பிறந்த பலன அடைய முடியுமாம்

Actor Abbas: 90களில் சாக்லேட் பாயாக ரசிகைகளின் மனதைக் கவர்ந்த அப்பாஸ், திடீரென்று தன்னுடைய மார்க்கெட் சரியவும் சினிமாவே வேண்டாம் என்று நியூசிலாந்து சென்று விட்டார். அங்கே சென்றவர் மொத்த சினிமாவையும் மறந்து, பெட்ரோல் பங்கில் கூட வேலை செய்தார். அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார்.

இவர் பாத்ரூம் கழுவக்கூடிய விளம்பரங்களிலும் நடித்து ஏகப்பட்ட கேலி கிண்டலுக்கு ஆளானார். அதன் பிறகு விளம்பரங்களிலும் நடிப்பதை தவிர்த்து விட்டார். ஆனால் இப்போது அப்பாஸ் சென்னை வந்திருக்கிறார். வந்தவுடன் கிட்டத்தட்ட எந்த சேனலை பார்த்தாலும் அவர்தான் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார், அவருடைய பேட்டி தான் தற்போது வைரலாக பரவுகிறது.

Also Read: ஆண்டவரை நம்பி மோசம் போன 5 நடிகர்கள்.. அர்ஜுன் மார்க்கெட் போக காரணமாக இருந்த படம்

இதில் ஒரே ஒரு இயக்குனரை மட்டும் குறிப்பிட்டு சொல்லி அவருடைய படத்தில் மட்டும் நடித்தால் போதும் என்று தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார். ஏற்கனவே கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி போன் செய்து அப்பாஸை அழைத்து இருக்கிறார். ஆனால் அதில் மட்டும் வேண்டாம், வேண்டுமானால் உங்களுடைய படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று வெளிப்படையாக கேட்டிருக்கிறார்.

இப்போது அப்பாஸ் நியூயார்க்கில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். அங்கே தான் அவர்களது குழந்தைகளையும் படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். அங்கே பசங்களுக்கு ஸ்கூல் லீவாம், அவர் பசங்களும் அரவிந்த்சாமி பசங்களும் நெருங்கிய நண்பர்களாம். அதனால் அவர் அரவிந்த்சாமி வீட்டில் தன் பசங்களை விட்டு செல்வதற்காக வந்திருக்கிறார்.

Also Read: எல்லா பெரும் தலைகளுடன் நடித்த அப்பாஸ்.. 5 படங்களிலும் ஆடியன்சை அள்ளிய சாக்லேட் பாய்

அப்பாஸ் கொடுத்து பேட்டியில் அவருக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசையாக இருக்கிறதாம். அதுவும் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க ரொம்ப விருப்பமாம். அப்பதான் பிறந்த பலன அடைய முடியுமாம். லோகேஷ் கனகராஜ்- கமல் கூட்டணியில் அடுத்ததாக விக்ரம் 2 படம் உருவாகுவதால் அந்த படத்தில் எப்படியாவது வாய்ப்பு வாங்கி விட வேண்டும் என்று நாலா பக்கமும் அப்பாஸ் கொக்கி போட்டுக் கொண்டிருக்கிறார்.

இதற்கு கமல் மற்றும் லோகேஷ் இருவரும் மனம் வைத்தால் மட்டுமே முடியும். ரசிகர்களும் அப்பாஸை நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் பார்க்க  விரும்புகின்றனர். லோகேஷின் LCU-ல்  அப்பாஸும் நுழைந்தால் இனி அடுத்தடுத்த படங்களிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காகவே இப்படி ஒரு பிளான் போட்டு வாய்ப்பு கேட்டிருக்கிறார்.

Also Read: அப்பாஸ் வாழ்க்கையில் இவ்வளவு சோகம் நடந்திருக்கிறதா.. லட்டு போல் கிடைத்த 5 வாய்ப்புகளை தடுத்து நிறுத்திய துரோகி

Trending News