திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அப்பாஸ் இப்போது என்ன செய்கிறார் எங்கு இருக்கிறார் தெரியுமா? அவரே கூறிய பதில்

வெள்ளையாக இருக்கும் நடிகர்களை வரவேற்பதில் இந்திய சினிமா எப்போதும் சிறப்பானது. அப்படியாக வெள்ளை நிறத்தால் ஹிட் அடிபபதில் அரவிந்த் சாமி முதல் அஜித் குமார் வரை தமிழ் சினிமா நேர்த்தியாக கையாளும் என்னதான் அழகை வைத்து நுழைந்தாலும் திறமை மட்டுமே நீடிக்கும்.

இப்படியாக 1996ல் வெளிவந்த காதல் தேசம் படத்தில் அறிமுகமானவர் தான் அப்பாஸ் தமிழில் சில படங்கள் நடித்தாலும் இந்தி மலையாளம் தெலுங்கு என அப்போது பிசியாக இருந்தவர் தான் அப்பாஸும்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு கே.வி.ஆனந்த இயக்கத்தில் ஜீவா நடித்த ‘கோ’ படத்தில் ஒரு பாடலுக்கு வந்திருப்பார். பிறகு “ஹார்பிக்”விளம்பரத்திற்காக வீடுகளுக்குள் நுழைந்த அப்பாஸ் இப்போது காணவே முடிவதில்லை.

abbas
abbas

இந்திய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்கள் நடித்த அப்பாஸ் இப்போது நியூஸிலாந்தில் இருக்கிறாராம். சமீபத்தில் அப்பாஸின் மகளின் புகைப்படம் சமூகவலைகளில் வெளியாகி பெரும் டிரண்டிங்கை பெற்றது.

அப்போது நடந்த பேட்டியில் அப்பாஸ் கூறியதாவது நான் ஒரு மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக வேலை செய்தேன், அதை நான் ரசித்தேன். கட்டுமானத் துறையிலும் பணியாற்றினேன்.என் வேலையைச் செய்வதிலும், நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அதைப் பெறுவதிலும் சுதந்திரத்துடன் வாழ இது அனுமதிக்கும் என்று கூறி இருந்தார்..

இப்படியாக சாக்லேட் பாய் வாழ்வும் கரைந்து விடுகிறது.

Trending News