புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நான் சினிமாவை விட்டு விலக இதுதான் காரணம்.. முதல்முறையாக வாய் திறந்த சாக்லேட் பாய் அப்பாஸ்

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் நடிகராக வலம் வந்த நடிகர் அப்பாஸ் சமீப காலமாக திரைப்படங்களில் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்த உண்மையை சமீபத்திய யூடியூப் பேட்டியில் தெரிவித்ததன் மூலம் அப்பாஸ் சினிமாவை விட்டு விலகிய இதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் அஜித் போல் அனைத்து இளம் பெண்களின் மனதிலும் காதல் நாயகனாக வலம் வந்தவர் தான் அப்பாஸ். ஆனால் பெரும்பாலும் இரண்டாம் கட்ட கதாநாயகனாகவே நடித்து வந்தார். அப்பாஸ் சோலோ ஹீரோவாக நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றதில்லை.

இதனாலேயே அவருக்கு ஹீரோ வாய்ப்புகள் அதிகம் வரவில்லை. இரண்டாவது ஹீரோவாக தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வந்தார். பின்னர் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு திருட்டுப்பயலே படத்தில் வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பின்னர் அது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்காமல் ரசிகர்களை ஏமாற்றினார் அப்பாஸ். பெரிய ஹீரோவாக வலம் வருவார் என எதிர்பார்த்தவர் திடீரென பாத்திரம் கழுவும் விளம்பரத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

abbas-latest-cinemapettai
abbas-latest-cinemapettai

இந்நிலையில் தற்போது சினிமாவுக்கு மொத்தமாக முழுக்கு போட்டுவிட்டு தன்னுடைய மனைவி பிள்ளை குட்டிகளுடன் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். இருந்தாலும் விடுவார்களா நம்ம ஆட்கள். அவரைத் தேடிப்பிடித்து சமீபத்தில் பேட்டி எடுத்துள்ளனர். அதில் ஏன் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டீர்கள்? எனவும் கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்கு அப்பாஸ், தன்னையும் வியக்க வைக்கும் அளவுக்கு எந்த கதையும் வரவில்லை எனவும், நாளுக்கு நாள் நடிப்பு மிகவும் போர் அடித்து விட்டதால் சினிமாவை விட்டு விலகி தற்போது தன்னுடைய குடும்பத்துடன் நல்லபடியாக இருக்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Trending News